இது, பொருட் பிரிவின்கட் கார் குறித்து ஆறு திங்கள் இடையிட்டது. |
‘நெஞ்சு நடுக்குற’ என்னும் பாலைக்கலி (24)யுள் |
“நடுநின்று, செய்பொருண் முற்றுமளவென்றார்” என்றலின் எத்துணையும் அணித்தாக மீள்வலென்றதாம். இவற்றிற்குப் பேரெல்லை வந்த செய்யுள் வந்துழிக் காண்க. |
நீராடல் நுகர்ச்சி |
189. | யாறுங் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப. | (50) |
|
பி.இ.நூ. |
நம்பியகம் 90 |
......கடும்புனல் யாறும் வண்டிமிர் கமல வாவியும் குளனும் ஆடிவிளை யாடலும் கூடும் கிழத்திக்கு . |
இல.வி. 462 |
நம்பியகச் சூத்திரமே. |
இளம். |
இது தலைவற்குங் கிழத்திக்கு முரியதோர் மரபு உணர்த்திற்று. |
இ-ள்: யாறுங் குளனும் காவும் ஆடி என்பது-விளையாட்டு என்று கொள்க. |
உதாரணம் |
“அருந்தவ மாற்றிய னுகர்ச்சிபோ லணிகொள” என்னும் பாலைக்கலியுள், |
கோடற் பயிரோடு அறுகம்புற் கிழங்கையும் உண்டு வெறுத்த ஆண்மான்கள் தம் பெண் மான்களைத் தழுவி தண்ணீர் பருகி ஓரிடத்துத் தங்கி விட்டன. தலைவன் தான் பொருள் செயப் பிரியுங் காலத்தில் நம்மனையிடத்து முல்லை படர்ந்த நொச்சிக்கிளைகளைச் சுட்டிக் காட்டி யான் சென்று பொருளீட்டி மீளும் காலம் இந்நொச்சி மலரும் கால அளவினதேயாம் என்று கூறினார். அக்காலம் இதுவோ; அன்றிவேறோ. |