பக்கம் எண் :

கற்பியல் சூ.48287
 

பிற பிரிவுக்காலம்
  

188.

ஏனைப் பிரிவும் அவ்வியல் நிலையும். (49)
 

பி.இ.நூ.
  

முன் சூத்திரத் துள்ளனவே.
  

இளம்.
  

இதுவுமது.
  

இ-ள் : ஒழிந்த பொருள்வயிற் பிரிவிற்கும் காலம் யாண்டினது அகம் என்றவாறு.
  

நச்.
  

இஃது எஞ்சிய பிரிவிற்கு வரையறை கூறுகின்றது.
  

இதன்  பொருள்  :  ஏனைப்  பிரிவும்  அவ்வயின்  நிலையும் கழிந்து நின்ற தூதிற்கும் பொருளிற்கும்
பிரிந்து மீளும் எல்லையும் யாண்டினதகம் என்றவாறு.
  

உதாரணம்
  

“மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல்
பாடுலந் தன்றே பறைக்குர லெழிலி
புதன்மிசைத் தளவி னிதன்முட் செந்நனை
நெடுங்குலைப் பிடவமொ டொருங்கு பிணியவிழக்
காடே கம்மென்றன்றே யாறே
கோடுடைந்தன்ன கோடற் பைம்பயிர்ப்
பதவின் பாவை முனைஇ மதவுநடை
யண்ணனல் லேறுமாபிணை தழீஇத்
தண்ணறல் பருகித் தாழ்ந்து பட்டன்றே
யனையகொல்வாழி தோழிமனைய
தாழ்வி னொச்சி சூழ்வன மலரும்
மௌவன் மாச்சினை காட்டி

யவ்வள வென்றோ ராண்டுச் செய்பொருளே”
1
  

(அகம்-23)


1 பொருள்   : தோழீ! பறை  போலும் ஒலிமிக்க மேகம் நிலம் குளிரும்படி மழை பெய்து ஒலியடங்கியது.
புதர் மேல் படர்ந்த செம்முல்லைக் கொடியினது சிதல் முள்போலும் அரும்புகள் பிடவ அரும்புகளோடு
முறுக்கவிழ்ந்து மலரக் காடானது கம் என மணம்கமழ்ந்தது.