* பொருள்: எந்தையே! வேந்தன் தன் போர் வினையை முடித்த பின்னர் முல்லைநிலத்தே வேல்வீரர் யாவரும் இன்பம் அடைய நீ பாகன் கடிவாளத்தை இழுத்துச் செலுத்தன் அல்லது தாற்றுக்கோல் உறுத்தின் இவ்வுலகம் முழுதுமே புறப்பாட்டின் தொடக்க இடமாகும். என்னும்படி விரையும் நல்லநான் குதிரைகள் பூட்டப்பட்ட நெடியதேரில் கொடிஞ்சி விளங்க ஏறி, உள்ளீடற்ற அவரைத் தோல்போலும் வயிற்றையும் தொங்கிய செவியையும் உடைய வெள்ளை ஆட்டுக்குட்டிகள் புன்தலைச் சிறுவரோடு துள்ளி மன்றத்துள்ள ஆத்தித் தழையைக் கறிக்கும்படியான சீறூர்கள் பல கடந்து இம் மாலைக் காலத்தில் நீர்த்துளி வார்ந்த கண்ணனாய்ப் பலவாக வெறுத்துத் தனித்துறையும் தலைவியின் கூந்தலில்மலர் சூட்டினாய். இனியதொன்றை நீ செய்தாய்; வாழ்க. |