உதாரணம் |
“இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப் புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறிய தறிந்தன்றல்லது வந்தவாறு நனியறிந்தன்றோ இலனே தாஅய் முயற்பறழ் உகளும் முல்லையம் புறவிற் கவைக்கதிர் வரகின்சீறூர் ஆங்கண் மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ இழிமின் என்ற நின்மொழி மருண்டிசினே வான்வழங் கியற்கை வளிபூட்டினையோ மானுரு வாகநின் மனம்பூட்டினையோ உரைமதி வாழியோ வலவஎனத்தன் வரைமருள் மார்பின் நளிப்பனன் முயங்கி மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை விருந்தேர் பெற்றனள் திருந்திழையோளே”1 |
(அகம்-384) |
எனவரும். பிறவும் மன்ன. |
கற்பியல் முற்றிற்று |
நச். |
இது, பிரிந்து மீளுங்காற் செய்யத் தகுவதோர் இயல்பு கூறுகின்றது. |
இ-ள்: வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை-யாதானுமோர் செய்வினையிடத்துப் பிரிந்தோன் அதனை முடித்து மீண்டுவருங்காலத்து, இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை-எத்துணைக் காதம் இடையிட்டதாயினும் அவ்விடையின்கணுண்டாகிய ஒருவழியிடத்துத் தங்கிவருதலில்லை. உள்ளம் போல உற்றுழி உதவும்-உள்ளஞ் சேட்புலத்தை ஒருகணத்திற் செல்லுமாறு போலத் தலைவன் மனஞ் சென்றுற்ற விடத்தே ஒருகணத்திற் சென்று உதவி செய்யும், புள்இயல் கலிமா உடைமையான-புட்போல நிலந்தீண்டாத செலவினையுடைய கலித்த குதிரையுடையனாதலான் என்றவாறு. |
தேருங் குதிரையாலல்லாது செல்லாமையிற் குதிரையைக் கூறினார். இஃது இடையில் தங்காது இரவும் பகலுமாக வருதல் கூறிற்று. இதனை மீட்டுக்கெல்லை கூறிய சூத்திரங் |
1 பொருள் : பக்கம் 68ல் காண்க. |