(இ - ள்.) பின்னே பலிக்கும் எங்கள்வார்த்தையென்று சொல்லி மேம்பட்ட சொல்லைச் சிறப்பித்தது எ-று. (வ - று.) எஞ்சொ லெதிர்கொண் டிகழான் வழிநிற்பிற் குஞ்சர வெல்படையான் கொள்ளானோ-எஞ்சும் இகலிட னின்றி யெறிமுந்நீர் சூழ்ந்த அகலிட மங்கை யகத்து. (இ - ள்.) எம்முடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு எள்ளானாகி முறைமையே நிற்பின் யானையால் நிறைந்த வெல்லுஞ் சேனை மன்னன் கைக்கொள்வன்; ஒழியும்இகல் இடமின்றியே போக அலையுங்கடல் வளைந்த பரந்தபூமியை அங்கையிடத்திலே. எ-று. அங்கையிடத்திலே கொள்ளானோவென்க. (32) 221.செவியறிவுறூஉ மறந்திரி வில்லா மன்பெருஞ் சூழ்ச்சி அறந்தெரி கோலாற் கறிய வுரைத்தன்று. (இ - ள்.) மாற்சரியம் கெடுதலில்லாதநின்று நிலைத்த பெரிய எண்ணத்தைத் தருமத்தை ஆராயும் செங்கோலினையுடையாற்கு உணர மொழிந்தது. எ-று. (வ - று.)1அந்தணர் சான்றோ ரருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே - முந்தை வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி மொழிநின்று கேட்டன் முறை. (இ - ள்.) வேதியர் அமைந்தோர் அரியதவத்தினையுடையோர்தம்முடைய தமையன்மார் தகப்பன் மாதா இப்படியொத்த இவர்க்குமாலை மன்னனே, முன்னோர்செய்த நெறியேநின்றுபின்பு கடலை எல்லையாகவுடைய ஞாலத்து வார்த்தையை நின்றுகேட்குமது வழக்கு. (33) 222. குடைமங்கலம் நாற்றிசையும் புகழ்பெருக வீற்றிருந்தான் குடைபுகழ்ந்தன்று. (இ - ள்.) நான்கு திக்கும் கீர்த்திமிகவீற்றிருந்த அரசன் குடையைப்புகழ்ந்தது. எ-று. (வ - று.) தன்னிழலோ ரெல்லோர்க்கு தண்கதிராந்தற்சேரா வெந்நிழலோ ரெல்லோர்க்கும் வெங்கதிராம்-இன்னிழல்வேல் 2மூவா விழுப்புகழ் முல்லைத்தார்ச் செம்பியன் கோவா யுயர்த்த குடை.
1. தொல் புறத். சூ.29 ,இளம்.மேற்.; குறள் 432 , பரிமேல் . வி. 2. பு - வெ . 158. |