(இ - ள்.) தன்னுடைய நிழலில் வாழ்வார்பலருக்கும் குளிர்ந்த நிறை மதியாம்; தன்னைச்சேராதவெய்ய நிழலாராகிய பகையிடத்துள்ளார் பலர்க்கும்வெவ்விய இரவியாம்; இனிய நிழல்விடும் வேலினையும் என்றும் புதிதாய் வரும் சீரிய கீர்த்தியையும்வெற்றிமாலையினையுமுடைய சோழன் அரசு தொழிற்கமைந்து உயர்ந்த கொற்றக்குடை. (34) 223.வாண்மங்கலம் கயக்கருங் கடற்றானை வயக்களிற்றான் வாள்புகழ்ந்தன்று. (இ - ள்.) பகைவராற் கலக்குதற்கரிய கடல்போலும்சேனையினையும் வலிய யானை யினையுமுடையான் வாளைப் புகழ்ந்தது. எ-று. (வ - று.) கொங்கவி ழைம்பான் மடவார் வியன்கோயில் மங்கலங் கூற மறங்கனலும்- செங்கோல் நிலந்தரிய செல்லு நிரைதண்டார்ச் சேரன் வலந்தரிய வேந்திய வாள். (இ - ள்.) தேன்மலரும் சுருள் குரல் அளகம் துஞ்சுகுழல் கொண்டை என்னும் ஐந்து பகுதியானமைந்த கூந்தலையுடைய பேதையர் அகன்ற மாளிகையிடத்து நன்மையைச்சொல்லச் சினமழலும்; நீதி நிலத்தைத் தருவான் வேண்டிநடக்கும் நிரைத்த குளிர்ந்த மாலையினையுடைய வானவன் வெற்றிவேண்டி உயர்த்த வாள் எ-று. வியன்கோயிலிற் கொங்கவிழைம்பால்மடவார் நிலந்தரியச் செல்லும் செங்கோலினது மங்கலத்தைக்கூற நிரைதண்டார்ச் சேரன் வலந்தரிய ஏந்தியவாள் மறங்கனலுமெனக் கூட்டுக. செல்லும் : செலுத்துமென்றுரைப்பாருமுளர். (35) 224. மண்ணுமங்கலம் எண்ணருஞ் சீர்த்தி யிறைவ னெய்தி மண்ணு மங்கல மலிவுரைத் தன்று. (இ - ள்.) எண்ணுதற்கரிய மிக்க புகழினையுடையஅரசன் பொருந்தி மஞ்சனம் பண்ணும் மங்கலத்தினதுமிகுதியைச் சொல்லியது. எ-று. (வ - று.)1கொங்கலர் கோதைக் குமரிமடநல்லாள் மங்கலங் கூற 2மலிபெய்திக் - கங்கையாள் பூம்புன லாகங் கெழீஇயினான் போரன்டுதோள் வேம்பார் தெரியலெம் வேந்து. (இ - ள்.) தாதுவிரியும் மாலையாற்பொலிந்தகன்னியாகிய பேதைமையினையுடைய நல்லவள் மங்கலத்தைச்சொல்லச் சிறந்து மணந்து கங்கை
1. நன். சூ. 409, மயிலை. விரு.மேற். (பி-ம்.)2. 'மலிவெய்தி' |