யென்னும் பெயரினையுடையவள் பொலிந்தநீராகியமார்பை அணைந்தான், போரைவெல்லும்புயத்தினையும் வேம்புநிறைந்த மாலையினையு முடைய எங்கள்மன்னன் எ-று. (36) 225. ஓம்படை இன்னது செய்த லியல்பென விறைவன் முன்னின் றறிவன் மொழிதொடர்ந் தன்று. (இ - ள்.) இன்ன காரியத்தைச் செய்யுமது தன்மையெனச் சொல்லி வேந்தன் முன்னே நின்று புலமை மிக்கவன்அடுத்துச் சொல்லியது எ-று. (வ - று.)1ஒன்றி லிரண்டாய்ந்து மூன்றடக்கிநான்கினால் வென்று 2களங்கொண்ட வேல்வேந்ே்த- சென்றுலாம் ஆழ்கடல்சூழ் வையகத்து ளைந்துவென்-4றாறகற்றி ஏழ்கடிந் தின்புற் றிரு. (இ - ள்.) ஞானத்தாலே 5காரியாகாரியங்களைத் தெரிந்து நட்புப்பகை உதாசீனமென்னும் மூன்றினையும் உட்கொண்டு யானை தேர் குதிரை காலாளாலே பூசலை வென்றுபோர்க்களத்தைக் கைக்கொண்ட வேன் மன்னனே, பெயர்ந்து கரையைப் பொரும் ஆழ்ந்த கடல்சூழ்ந்தகுவலயத்து இந்திரியங்களைந்தையும் வென்று ஆறினையும்பெருக்கி ஏழினையும் கடிந்து இனிமையுற்று நெடுங்காலமிருப்பாயாக. எ-று. ஆறு ஏழாவன: "நாடிய நட்புப்பகைசெலவு நல்லிருக்கை, கூடினரைப் பிரித்தல் கூட்டலா-றீடிலா, 3வேட்டங்கடுஞ்சொல் மிகுதண்டஞ்சூது பொரு, ளீட்டங்கள்காமமிவை 6யேழு" ஒன்று-ஆன்மா; இரண்டு-புண்ணிய பாபம்; மூன்று-காமம் வெகுளி மயக்கம், உற்சாகசத்திபிரபுசத்தி மந்திரசத்தி; நான்கு -சாமதான பேத தண்டம்; ஐந்து-சத்தப் பரிச ரூப ரத கந்தம்; ஆறு-படை குடி கூழ்அமைச்சு நட்பு அரண் என்றுமாம். (37) 226. புறநிலை வாழ்த்து வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப வழிவழி சிறக்கென வாய்மொழிந் தன்று. (இ - ள்.) நீ வணங்குந் தெய்வம் நின்னைப்பரிகரிப்ப நின் வழிவழி மிகுவதாகவெனச் சொல்லி உண்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) கொடிபடு முத்தலைவேற் கூற்றக் கணிச்சிக் கடிபடு கொன்றையான் காப்ப - நெடிதுலகிற் பூமலி நாவற் பொழிலகத்துப் போய்நின்ற மாமலைபோன் மன்னுக நீ.
1. நன். சூ. 268, மயிலை விரு. மேற். 2. பு.வெ. 180:4,குறிப்புரையைப்பார்க்க. 3. குறள். 566. பரிமேல். வி. மேற். (பி-ம்)4. 'ஆறடக்கி'. 5. 'காரணகாரியங்களை'. 6. 'ஏழ்' |