பக்கம் எண் :

229. வள்ளி

பூண்முலையார் மனமுருக
வேன்முருகற்கு வெறியாடின்று.

(இ - ள்.) ஆபரணத்தினாற் சிறந்த முலையினையுடையார்நெஞ்சு நெகிழ வேலினையுடைய குமரனுக்கு வெறியென்னுங்கூத்தை ஆடியது எ-று.

(வ - று.)1வேண்டுதியா னீயும் விழைவோ விழுமிதே
ஈண்டியம் விம்ம வினவளையார்-பூண்டயங்கச்
சூலமொ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு
வேலனொ டாடும் வெறி.

(இ - ள்.) விரும்புதியால் நீயும்; இவ்விருப்பம்சாலச் சீரிது; திரண்டவாச்சியங்கள் ஒலிப்பத்தம்மிற்றாமொத்த தொடியினையுடையார் ஆபரணமிலங்கச் சூலத்துடனே கூத்தாடும் சோதியான் மிகும் வேணியினையுடையான் புதல்வனுக்கு வெறியாட்டாளனுடனாடும் வள்ளிக் கூத்தை எ-று.

2வெறி வேண்டுதியால் நீயுமென்க.

(41)

230. புலவராற்றுப்படை

இருங்கண்வானத் திமையோருழைப்
பெரும்புலவனை யாற்றுப்படுத்தன்று.

(இ - ள்.) பெரிய இடத்தினையுடைய வானத்துத்தேவர்களிடை மிக்க அறிவாளனை நெறியிலேசெலுத்தியது எ-று.

(வ - று.)1வெறிகொ ளறையருவி வேங்கடத்துச்செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும்-பொறிகட்
கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்க
அருளீயு மாழி யவன்.

(இ - ள்.) நறுநாற்றத்தினை யுடைத்தாய் ஒலிக்கும்அருவியாற் பொலிந்த திருவேங்கடத்திடத்துப்போவையாயின், முறைமைகொண்ட வேடத்தையுடையோய், நீயும், இந்திரியங்கட்குமயக்கங்கொடுக்கும் காசினியில் துயரெல்லாமொழியஅருளை வழங்கும், சக்கரத்தினையுடையவன் எ-று.

நீயும்செல்லின் அருளீயுமெனவே,எனக்கு நல்கினானென்பதாம் ;2"உலவா வூக்கமொடுன்னியது முடிக்கும், புலவராற்றுப்படை புத்தேட்கு முரித்தே "என்பதனானறிக.

(42)

231. புகழ்ந்தனர் 3பரவல்

இன்னதொன் றெய்துது மிருநிலத்தியாமெனத்
துன்னருங் கடவுட் டொடுகழ றொழுதன்று.


1. தொல். புறத் . சூ.21, இளம் .மேற். 2. பன்னிருபாட்டியல், 320. 3. தொல். புறத். சூ. 27, ந