பக்கம் எண் :

9. பாடாண்படலம்

(இ - ள்.) இன்னதொருபதத்தைக்கிட்டுவோமாக; பெரிய பூமியிடத்து யாங்களெனச் சொல்லிக்கிட்டுதற்கரிய தெய்வத்தின் கட்டும் வீரக்கழலையுடையபாதங்களைப் பணிந்தது எ-று.

(வ - று.) சூடிய வான்பிறையோய் 1சூழ்கடலைநீற்றரங்கத்
தாடி யசையா வடியிரண்டும்-பாடி
உரவுநீர் ஞாலத் துயப்போக வென்று
பரவுதும் பல்காற் பணிந்து.

(இ - ள்.) சடையிலே சூடிய வாலிதான இளமதியையுடையோய்!சுற்றிய சுடுகாடான சாம்பலரங்கத்திலே நிருத்தமாடி வருந்தாத சீர்பாத மிரண்டையும் துதித்து, உலாவும்கடல்சூழ்ந்த பூமியினின்றும் பிழைத்து நன்னெறிக்கண்ணேபோவோமென்று சொல்லிப் பழிச்சுதும்,பலகாலும்வணங்கி எ-று.

(43)

232. பழிச்சினர் பணிதல்

வயங்கியபுகழ் வானவனைப்
பயன்கருதிப் 1பழிச்சினர்ப் 2பணிந்தன்று.

(இ - ள்.) விளங்கிய கீர்த்தியையுடைய இறைவனைப் பெறும் பேற்றை நினைந்து வாழ்த்தினராய்வணங்கியது எ-று.

(வ - று.) ஆட லமர்ந்தா னடியடைந்தா ரென்பெறார்
ஓடரி யுண்க ணுமையொருபாற்-கூடிய
சீர்சா லகலத்தைச் செங்க ணழனாகம்
தாராய்த் தழுவப் பெறும்.

(இ - ள்.) திருக் கூத்தாடுதலை மேவினவன் சீர்பாதங்களைச்சேர்ந்தார் என்பெறார் ? செவ்வரி கருவரி பரந்தமையுண் கண்ணினையுடைய உமாதேவி ஒரு பக்கத்தே பொருந்தியவிழுப்பம் அமைந்த திருமார்பத்தைச் சிவந்த கண்ணினையுடைத்தாய்அழலும் பாம்பு மாலையாய்ப் பொருந்தப்பெறும் எ-று.

ஆதலால், ஆடலமர்ந்தான் அடியடைந்தார்என்பெறாரென்க.

(44)

233. கைக்கிளை

தண்டாக் காதற் றளரிய றலைவன்
வண்டார் விரும்பிய வகையுரைத் தன்று.

(இ - ள்.) கெடாத அன்பினையும் நுடங்குந்தன்மையினையுமுடையவள், தலைவனுடைய வளவிய மாலையை ஆசைப்பட்ட கூறுபாட்டைச் சொல்லியது. எ-று.

(வ - று.) மங்குன் மனங்கவர மான்மாலைநின்றேற்குப்
பொங்கு மருவிப் புனனாடன் - கங்குல்.


1. கலி. கடவுள் வாழ்த்து. (பி-ம்) 2. 'பழிச்சினர் பணிந்தன்று'