மலர் மார்பனே , பரத்தையர் பலர் பாடியும் நின்செல்வத்தை வயல் சூழ் திரு நகரிற் கண்டேம்; இனி யாங்கள் தோயேமெனக் கூட்டுக. பாடாண்டிணையிற் கைக்கிளைவகையும் பெருந்திணைவகையும் புலவி பொருளாகதி தோன்றிய பாடாண்பாட்டும் , பாட்டுடைத் தலைமகனையே கிளவித் தலைமகனாகக் , கூளினாராதலின் ,3 'உருவி யாகிய வொரு பெருங்கிழவனை , 4அருவி கூறுத லானத் தம்மே' என்னும் விதி தகாது. (47) 236. கடவுண் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம் இமையா நாட்டத் திலங்கிழை மகளிர் அமையாக் காத லமரரை மகிழ்ந்தன்று. (இ - ள்.) இமையாத கண்ணனையும் ஒளிவிடும் ஆயரணத்தினையுமுடைய தெய்வமகளிர் ஆராத அன்புடைய கடவுளரை விரும்பியது எ-று. (வ - று.)2நல்கெனி னாமிசையா ணோமென்னுஞ் சேவடிமேல் ஒல்கெனி னுச்சியா ணோமென்னும் - மல்கிருள் ஆட லமர்ந்தாற் கரிதா லுமையாளை ஊட லுணர்த்துவரோ ராறு. (இ - ள்.) அருள்செய்கெனச் சொல்லின், நும்முடைய நாவின்மேலிருக்கும் சொன்மகள் நோவுபடுமென்று சொல்லும்; சிவந்த பாதத்திலே வணங்குவேனென்று சொல்லின் , நும்முடைய திருமுடிமேலிருக்கும் கங்காதேவி நோவுபடுமென்று சொல்லும்; மிக்க இருளிடத்துத் திருக்கூத்தை மேவின இறைவனுக்கு அருமையுடைத்தாயிருந்தது , உமாதேவியை வழக்காட்டினைத் தீர்ப்பதொரு நெறி எ-று. (48)
237. கடவுண் மாட்டுக் மானிடப்பெண்டிர் நயந்த பக்கம் முக்கணான் முயக்கம்வேட்ட மக்கட்பெண்டிர் மலிவுரைத்தன்று (இ - ள்.) மூன்று திருநயனத்தையுடையானது புல்லுதலை விரும்பின மானிட மகளிர் கூறுபாட்டைச் சொல்லியது எ-று. (வ - று.)2அரிகொண்ட கண்சிவப்ப வல்லினென் னாகம் புரிகொண்ட நூல்வடுவாப் புல்லி - வரிவண்டு பண்ணலங்கூட் டுண்ணும் பனிமலர்ப் பாசூரென் உந்நலங் கூட்டுண்டா னூர். (இ - ள்.) செவ்வரி கருவரி பரந்த விழிசிவப்பக் 5கனவில் என்னுடைய மார்பினை முறுக்குதலுடைத்தான பூணூற்றழும்புபடப் புல்லி,
1. பா.வி. சூ . மேற். 2. தொல். புறத். சூ . 23. இளம்.மேற். 3. (பி-ம்)உருபி. 4. அருபி. 5. இராப்பொழுதில் |