பக்கம் எண் :

311. இரவுத்தலைச் சேறல்

காண்டல் வேட்கையொடு கனையிருணடுநாள்
மாண்ட சாயன் மனையிறந் தன்று.

(இ - ள்.) தலைவனைக் காணவேண்டுமென்னும் ஆசையோடு செறிந்த இருளையுடைய ஒத்த யாமத்துமாட்சிமைப்பட்ட மென்மையாள் தன் இல்லினின்று இறந்தது எ-று.

வ - று.1பணையா வறைமுழங்கும் பாயருவி நாடன்
பிணையார மார்பம் பிணையத் - துணையாய்க்
கழிகாம முய்ப்பக் கனையிருட்கட் செல்கேன்
வழிகாண மின்னுக வான்.

(இ - ள்.) வீரமுரசென்னக் கற்பாறையிடத்து ஒலிக்கும் பரந்த அருவியாற்பொலிந்த நாடன் மூட்டுவாயினையுடைய ஆரமார்பத்தைத் தழுவ எனக்குத் துணையாய் மிக்க ஆசை செலுத்தச் செறிந்த இருளிடத்துப் போவேன், நெறியைக் காண மின்னுவதாக, மேகம் எ-று.

(6)

312. இல்லவை நகுதல்

இல்லவை சொல்லி யிலங்கெயிற்றரிவை
நல்வய லூரனை நகைமிகுத் தன்று.

(இ - ள்.) உள்ளனவல்லாதவற்றை உரைத்து விளங்கும் பல்லினையுடைய மடவாள் அழகிய பழனஞ்சூழ்ந்த ஊரனை நகையைப் பெருக்கியது எ-று.

வ - று. முற்றா முலையார் முயங்க விதழ்குழைந்த
நற்றா ரகல நகைதரலின் - நற்றார்
கலவே மெனநேர்ந்துங் காஞ்சிநல் லூர
புலவேம் பொறுத்த லரிது.

(இ - ள்.) இளமுலையினையுடையார் தழுவப் பூந்தோடு வாடின அழகிய மாலையினையுடைய மார்பம் சிரிப்பைத் தருதலின், அழகிய மாலையினை மணவேமென நிச்சயித்தும் காஞ்சிமரத்தினையுடைய அழகிய ஊரனே, ஊடேம்; நின்னுடன் ஊடின் ஆற்றுதல் அரிது எ-று.

அரிது ஆதலிற் புலவேம் எ-று.

(7)

313. புலவியுட் புலம்பல்

நலவளை மடந்தை நற்றார் பரிந்து
புலவி யாற்றாள் புலம்புற் றன்று.

(இ - ள்.) அழகிய தொடியினையுடைய மடவாள்தலைவன் மார்பின் மாலையை அறுத்து ஊடலாற்றாளாய்த்தனிமையுற்றது எ-று.


1. தொல். அகத். சூ. 54, இளம். மேற்.