வ - று. ஓங்கிய வேலான் பணியவு மொள்ளிழை தாங்காள் வரைமார்பிற் றார்பரிந் - தாங்கே அடும்படர் மூழ்கி யமைமென்றோள் வாட நெடும்பெருங்க ணீந்தின நீர். (இ - ள்.) உயர்ந்த வேலினையுடையான் வணங்கவும் ஒள்ளிய ஆபரணத்தினையுடையாள் கோபத்தைத் தடாளாய் மலையன்ன அகலத்தின் மாலையை அறுத்து அவ்விடத்திலேவருத்துந் துயரத்திலே அழுந்தி மூங்கில் போன்ற மெல்லியதோள்கள் மெலிய, நெடியவாய்ப் பெரியவாகிய கண்கள் நீரிலே மிதந்தன எ-று. (8) 314. பொழுதுகண்டு இரங்கல் நிற்ற லாற்றா ணெடிதுயிர்த்தலமரும் பொற்றொடி யரிவை பொழுதுகண் டிரங்கின்று. (இ - ள்.) உயிர்நிற்றலைப் பொறாளாய் நெட்டுயிர்ப்புக் கொண்டு சுழலும் பொன்னாற்செய்தவளையினையுடைய தலைவி மாலைப்பொழுதைக் கண்டு வருந்தியது எ-று. வ - று. இறையே யிறந்தன வெல்வளை யுண்கண் உறையே பொழிதலு மோவா-நிறையைப் பருகாப் பகல்கரந்த பையுள்கூர் மாலை உருகா வுயங்கு முயிர். (இ - ள்.) கையிறையைக் கடந்தன, விளக்கத்தினையுடையதொடிகள்; மையுண்ட விழிகள் துளியைச் சொரிதலும்ஒழியா; என் நிறையை உண்டு ஆதித்தன் ஒளித்தநோய்மிகும் மாலைக்காலத்துக் கரைந்து வருந்தாநிற்கும், பிராணன் எ-று. (9) 315. பரத்தையை ஏசல் அணிவய லூரனொ டப்புவிழ வமரும் பணிமொழி யரிவை பரத்தையை யேசின்று. (இ - ள்.) அழகிய பழனத்தையுடைய ஊரனுடனே நீர்விளையாட்டுவிரும்பும் மெல்லிய சொல்லினையுடைய தலைமகள் பரத்தையைப்புல்லற் கூறியது எ-று. வ - று. யாமுயங்கு மென்முலையால் யாணர்வயலூரன் தேமுயங்கு பைந்தார் திரைமுயங்க - யாமுயங்க எவ்வையர் சேரி யிரவு மிமைபொருந்தாக் கவ்வை கருதிற் கடை. (இ - ள்.) யாம் பொறையாற்றாது வருந்தும் மெல்லிய கொங்கையாலே புதுவளப்பத்தினையுடைய கழனியால் நிறைந்த ஊரனது தேன் |