பக்கம் எண் :

(இ - ள்.) தழுவும் செவ்விமாலையைப் புனற்றிரை தழுவா நிற்ப யாம் தழுவா நிற்ப, இதற்கும் எம் தங்கையாராகிய பரத்தையர்சேரி பலரும் உறங்கும் இரவும் கண்ணிமை கூடாத ஆரவாரத்தை நினைப்பிற் சாலப் புல்லியது எ-று.

(10)

316. கண்டுகண் சிவத்தல்

உறுவரை மார்ப னொள்ளிணர் நறுந்தார்
கறுவொடு மயங்கிக் கண்சிவந் தன்று.

(இ - ள்.) பெரிய மலைபோன்ற அகலத்தினையுடையவனது ஒள்ளிய தொத்தினையுடைய கமழுமாலையை முனிவுடனே கலங்கித்தலைவி கோபித்தது எ-று.

வ - று. கூடிய கொண்கன் குறுகக் கொடிமார்பின்
ஆடிய சாந்தி னணிதொடர்ந்து-வாடிய
தார்க்குவளை கண்டு தரியா விவண்முகத்த
கார்க்குவளை காலுங் கனல்.

(இ - ள்.) மணந்த கொழுநன் அணுகக் கொடியனையாள் மார்பிடத்துத் தோய்ந்த சந்தனத்தின் அழகு மேவிச் செவ்வியழிந்த செங்கழுநீர் மாலையைக் கண்டு பொறாவாய் இவளுடைய முகத்திற் செவ்விக்குவளையாகிய கண்கள் அழலைச் சொரியும் எ-று.

(16)

317. காதலிற் களித்தல்

மைவரை நாடன் மார்பகம் பொருந்திக்
கைவிட லறியாக் காதலிற் களித்தன்று.

(இ - ள்.) மேகம்பொருந்தின மலைநாடனுடைய மார்பிடத்தே மேவி நீங்குதலறியாத அன்பினால் மகிழ்ந்தது எ-று.

வ - று. காதல் பெருகிக் களிசெய்ய வக்களியாற்
1கோதையுந் தாரு மிடைகுழைய-மாதர்
கலந்தாள் கலந்து கடைக்கண்ணாற் கங்குல்
புலந்தாள் புலரியம் போது.

(இ - ள்.) அன்புமிக்குக் களிப்புச்செய்ய அம்மகிழ்ச்சியால் மாலையும் கோதையும் நடுவே வாடக்காதலினையுடையாள் கூடினாள்; கூடிக் கடைக்கண்ணாலே நோக்கி இரவுப்பொழுதை முனிந்தாள், விடியற்காலத்து எ-று.

கங்குல் கழிந்ததென்று புலந்தாள்.

(12)

318. கொண்டகம் புகுதல்

காதல் பெருகக் கணவனைக் கண்ணுற்றுக்
கோதையாற் பிணித்துக் கொண்டகம் புக்கன்று.


1. புறநா. 73 : 13-4, குறிப்புரை.