இ - ள். அன்புமிகக் கொழுநனைக் கண்டு மாலையாற்கட்டி அகத்திலே கொண்டுபுக்கது எ-று. வ - று. கண்டு களித்துக் கயலுண்க ணீர்மல்கக் கொண்டகம் புக்காள் கொடியன்னாள் - வண்டினம் காலையாழ் செய்யுங் கருவரை நாடனை 1மாலையான் மார்பம் பிணித்து. (இ - ள்.) தலைவனைக் கண்டு மகிழ்ந்து கயல்போன்ற மையுண்ட கண் நீர்மிக அகத்திலே கொண்டுபுக்காள், வல்லியனையாள்; சுரும்பினங்கள் காலைப்பொழுதிலே யாழ்போல இசைக்கும் கரிய மலைநாடனைத் தாராலே அகலத்தைக் கட்டிக்கொண்டு எ-று. பிணித்துக் கொண்டு அகம்புக்காள்கொடியன்னாளென்க. (13) 319. கூட்டத்துக் குழைதல் பெய்தா ரகலம் பிரித லாற்றாக் 2கொய்தழை யல்குல் கூட்டத்துக் குழைந்தன்று. (இ - ள்.) இட்ட மாலையினையுடைய அகலத்தை நீங்குதல் பொறாத பறித்த தழையாற் சிறந்த அல்குலினையுடையாள் புணர்ச்சியிடத்து நெகிழ்ந்தது எ-று. வ - று. மயங்கி மகிழ்பெருக மால்வரைமார்பிற் றயங்கு புனலூரன் றண்டார் -முயங்கியும் பேதை புலம்பப் பிரிதியோ நீயென்னும் கோதைசூழ் கொம்பிற் குழைந்து. (இ - ள்.) மனங்கலங்கிக் களிப்பு மிகப் பெரிய வரைபோன்ற மார்பினையுடைய அசையும் புனலூரன்றன் குளிர்ந்த மாலையைத் தழுவியும் மடவாள் யான் தனிமைப்பட நீ பிரிகின்றாயோவென்று சொல்லும், மாலைசுற்றின பூங்கொம்புபோலத் தளர்ந்து எ-று. தளர்ந்து நீ பிரிதியோவென்னும். (14) 320. ஊடலு ணெகிழ்தல் நள்ளிருண் மாலை நடுங்கஞர் நலிய ஒள்வளைத் தோளி யூடலு ணெகிழ்ந்தன்று. (இ - ள்.) செறிந்த இருளையுடைய மாலைக்காலத்துத் துளங்கா நின்ற துயரம் நெருக்க ஒள்ளிய தொடியாற் சிறந்த தோளினையுடையாள் 3வழக்காட்டிடத்துக் குழைந்தது எ-று. வ - று. தெரிவின்றி யூடத் தெரிந்துநங்கேள்வர் பிரிவின்றி நல்கினும் பேணாய் - திரிவின்றித் துஞ்சே மெனமொழிதி தூங்கிருண் 4மான்மாலை நெஞ்சே யுடையை நிறை.
1. சீவக. 1988. 2. பு.வெ. 291. 3. பு. வெ. 236, 239, உரை. 4. பு. வெ. 308, 310. |