பக்கம் எண் :

12. பெருந்திணைப்படலம்

(இ - ள்.) அவ்விடத்துத் தலைவர் சொன்னகாலம் இஃது அன்றென மணம் பொருந்தின மாலையினையுடையதலைவி தேறுதலும் அத்துறையேயாம் எ-று.

வ - று. பொறிமயி லாலின பொங்கரெழிலி
சிறுதுவலை சிந்தின சிந்த - நறிய
பவர்முல்லை தோன்றி பரியாம லீன்ற
அவர்வருங் காலமீ தன்று.

(இ - ள்.) புள்ளிகளையுடைய மஞ்ஞை ஆலித்தன, சோலையாகிய மேகம் பொறையாற்றாமையான் மதுச்சிறுதுளியைச் சிதறின; சிதற, நறிய கொடிநெருக்கத்தான் மலிந்த முல்லையும் மெல் தோன்றியும் காலம் அறியாமல் முகிழ்த்தன; நம்முடைய தலைவர் வருங்காலம் இஃதன்று எ-று.

(7)

332. ஆண்பாற் கிளவி

காமுறு காமந் தலைபரிந் தேங்கி
ஏமுற் றிருந்த விறைவ னுரைத்தன்று.

(இ - ள்.) வேட்கை மிகும் ஆசை எல்லைகடப்ப ஏக்கமுற்று மயங்கி யிருந்த தலைவன் சொல்லியது எ-று.

பரிந்தென்பதனைப் பரியவென்க.

வ - று. கயற்கூடு வாண்முகத்தாட் கண்ணியநெஞ்சம்
முயற்கூடு முன்னதாக் காணின் - உயற்கூடும்
காணா மரபிற் கடும்பகலுங் கங்குலும்
நாணாளு மேயா நகை.

(இ - ள்.) கண்ணாகிய இணைக்கயல் பொருந்தியஒளியாற் சிறந்த முகத்தினையுடையாளைக் கூடக்கருதிய மனம் முயலிற்கு உறைவிடமாகிய மதியை முன்னே காணிற் பிழைத்தல் கூடும்; காணாத முறைமையிற்கொடிய பகலும் இரவும் நாடோறும் இயையா, மகிழ்ச்சி எ-று.

நகை - பலநாளும் மகிழும் கூட்டங்கள்.

(8)

333. பெண்பாற் கிளவி

வெள்வளை நெகிழவு மெம்முள் ளாத
கள்வனைக் காணாதிவ் வூரெனக் கிளந்தன்று.

(இ - ள்.) சங்கவளை சோரவும் எம்மைநினையாது வெள்வளையினைக் கொண்ட கள்வனைக் காணாது இப்பதியென்று சொல்லியது எ-று.

வ - று. வானத் தியலு மதியகத்துவைகலும்
கானத் தியலு முயல்காணும் - தானத்தின்
ஒள்வளை யோடவு முள்ளான் மறைந்துறையும்
கள்வனைக் காணாதிவ் வூர்.