வ - று.1மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் மண்மேல் இடங்கெடச் சென்றிறுத்த பின்னும் - நுடங்கெரிபோல் வெல்லப் பெருகும் படையாற்கு வேந்தர்மேற் செல்லப் பெருகுஞ் சினம். (இ - ள்.) சிங்கம்போற்கோபித்து மாறுபட்டெதிர்ந்தார் நிலத்தின் மேல் வெளிதூரப் படையெடுத்துப் போய்விட்டபின்பும் அசைந்தெரியும் நெருப்புப்போலச் சயிக்க வளரும் சேனையினையுடைய அரசனுக்குப் பகைமன்னர்மேல் எடுத்துச்செல்ல மிகாநிற்கும் கோபம் எ - று. (24) 2 வென்றோர் விளக்கங் கூறியது. 60. இதுவுமது இறுத்தபி னழிபிரங்கல் மறுத்துரைப்பினு மத்துறையாகும். (இ - ள்.) எடுத்துவிட்டபின்பு பகைவர் தேசத்துக் 3கேட்டிற்கு இரங்கலை அழித்துச் சொல்லினும் முன்பு சொன்ன துறையேயாம் . எ - று. வ - று. குரையழன் மண்டிய கோடுயர் மாடம் 4சுரையொடுபேய்ப் பீர்க்குஞ் சுமந்த - நிரைதிண்டேர்ப் பல்லிசை வென்றிப் படைக்கடலான் சென்றிறுப்ப நல்லிசை கொண்டடையார் நாடு. (இ - ள்.) ஆரவாரமுடைய நெருப்புக் கொளுத்தின மலையையொப்ப ஓங்கின மாளிகையெல்லாம் பேய்ச்சுரையும் பேய்ப்பீர்க்கும் மேற்கொண்டன; ஒழுங்குபட்ட திண்ணிய தேரினையும் பலகீர்த்தியாற் சிறந்த வென்றியினையும் சேனையாகிய கடலையுமுடையான்போய் எடுத்து விட, நல்ல புகழைச் சொல்லி இவனைக் கூடாதார் தேயம் எ - று. நாடு சுரையொடு பேய்ப்பீர்க்குஞ் சுமந்தவென்க . கொற்றவள்ளை இவ்வாறன்று. (25) வஞ்சித்திணைப் பாட்டு ஒன்றும் துறைப்பாட்டு இருபத்து நான்கும் முடிந்தன. மூன்றாவது வஞ்சிப்படலம் முற்றிற்று.
நான்காவது காஞ்சிப் படலம் (சூத்திரம் 4.) | காஞ்சி காஞ்சி யதிர்வே தழிஞ்சி பெரும்படை வழக்கொடு பெருங்காஞ் சிய்யே வாள்செல வென்றா குடையது செலவே வஞ்சினக் காஞ்சி பூக்கோ ணிலையே |
1. கலி. 2 : 3; புறநா. 71 : 1.2. தொல். புறத். சூ. 8. 3. (பி.ம்.)'கேட்டையிரங்கலை' 4. 'சுரையொடுபீரஞ்' |