5 | புகழ்த்தலைக் காஞ்சி தலைமா ராயம் தலையொடு முடிதன் மறப்பெயர்க் காஞ்சி மாற்றரும் பேய்நிலை பேய்க்காஞ் சிய்யே தொட்ட காஞ்சி தொடாக்காஞ் சிய்யே மன்னைக் காஞ்சி கட்காஞ் சிய்யே | 10 | ஆஞ்சிக் காஞ்சி மகட்பாற் காஞ்சி முனைகடி முன்னிருப் புளப்படத் தொகைஇ எண்ணிய வகையா னிருபத் திரண்டும் கண்ணிய காஞ்சி துறையென மொழிப. |
என் - னின், காஞ்சித்திணையும் துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) காஞ்சி, காஞ்சியதிர்வு, தழிஞ்சி, படைவழக்கு, பெருங்காஞ்சி, வாள்செலவு, குடைச்செலவு, வஞ்சினக்காஞ்சி, பூக்கோணிலை, தலைக்காஞ்சி, தலைமாராயம், தலையொடுமுடிதல், மறக்காஞ்சி, பேய்நிலை, பேய்க்காஞ்சி, தொட்டகாஞ்சி, தொடாக்காஞ்சி, மன்னைக்காஞ்சி, கட்காஞ்சி, ஆஞ்சிக்காஞ்சி, மகட்பாற்காஞ்சி, முனைகடி முன்னிருப்பு என இவை இருபத்திரண்டும் காஞ்சித்திணையும் துறையுமாம் எ - று. 61. 1காஞ்சி வேஞ்சின மாற்றான் விடுதர வேந்தன் காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று. (இ - ள்.) வெவ்விய சினத்தையுடைய வேற்றுமன்னன் வந்துவிட அரசன் காஞ்சியென்னும் பூவை மலைந்து காவலிடத்தைக் காக்க நினைந்தது எ - று. வ - று.2அருவரை பாய்ந்திறுது மென்பார்பண் டின்றிப் பெருவரைச் சீறூர் கருதிச் - செருவெய்யோன் காஞ்சி மலையைக் கடைக்கணித்து நிற்பதோ தோஞ்செய் மறவர் தொழில். (இ - ள்.) செருமுனையிற்படப் பொருவாரில்லாதபடியாலே முன்பு ஏறுதற்கரிய மலையேறி விழுந்தானும் சாவேமென்னும் வீரர், இக்காலம் இப்பெரிய மலையிடத்துச் சீறூரைக் காப்பான்வேண்டி நினைந்து பூசல் விருப்பத்தை யுடையோன் காஞ்சிப்பூவைச் சூட அணியிட்டு நிற்குமதுவோ, குற்றத்தைப்பண்ணும் வீரர் வினை? எ - று. ஓகாரம் : எதிர்மறை. (1) 62. காஞ்சியதிர்வு மேல்வரும் படைவரன் மிகவு மாற்றா வேல்வ லாடவன் விறன்மிகுத் தன்று.
1. சிலப். 26 : 191 . 2. புறநா. 31 : 6, குறிப்புரையைப் பார்க்க. |