பக்கம் எண் :

(இ - ள்.) எதிரூன்றுஞ் சேனை மேலிடுதலைப் பொறாத வேற்றொழிலை வல்ல வீரனுடைய வெற்றியை மிகுத்துச் சொல்லியது எ - று.

வ - று. மன்மேல் வருமென நோக்கான் மலர்மார்பில்
வென்வேன் முகந்த 1புண் வெய்துயிர்ப்பத் - தன்வேல்
பிடிக்கலு மாற்றாப் பெருந்தகை யேவத்
துடிக்கண் புலையன் றொடும்.

(இ - ள்.) மாற்றரசன் தன்மேலே மீதூர்ந்துவருமென்று பாரானாகி அகன்ற மார்பிடத்து வென்றி3வேல் பாய்ந்து முதுகுபுறத்துருவிய புண் வெய்தாக உயிர்ப்பத் தன்னுடைய வேலைக் கையாற்பிடிக்கவுமாட்டாத பெரிய மேம்பாட்டினையுடையவன் சொல்லத் துடியின் கண்ணைப் புலையன் கொட்டாநிற்கும் எ - று.

(2)

63. தழிஞ்சி

பரந்தெழுதரு படைத்தானை
வரம்பிகவாமைச் சுரங்காத்தன்று.

(இ - ள்.) கைவளர்ந்து நடவாநின்ற ஆயுதத்தையுடைய சேனை தங்களெல்லையிற் புகுதாதபடி அருமையுடைத்தான வழியிடத்தைக் காத்தது எ - று.

வ - று. குலாவுஞ் சிலையார் குறும்புகொள வெஃகி
உலாவு முழப்பொழிக வேந்தன் - கலாவும்
இனவேங்கை யன்ன விகல்வெய்யோர் காவல்
புனவேய் நரலும் புழை.

(இ - ள்.) ஏறிட்ட வில்லினையுடைய காஞ்சியார்தம் அரணினைக் கைக்கொள்ளவேண்டி இயங்கு முயற்சியை ஒழிவானாக எதிர்மன்னன்; தம்மிற் கலக்கும் இனத்தாலுயர்ந்த புலியையொத்தமாற்சரியத்தை விரும்புவோர் காக்குமிடம் புனத்தின் மூங்கில் ஆர்க்கும் நூழை எ - று.

இகல் வெய்யோரெனப் பிறர்போற் கூறினார் . வஞ்சித்தழிஞ்சி இவ்வாறன்று.

(3)

64. படைவழக்கு

24முத்தவிர்பூண் மறவேந்தன்
ஒத்தவர்க்குப் படைவழங்கின்று.

(இ - ள்.) முத்து விளங்கும் ஆபரணத்தையுடைய சினமன்னன் தம்மில் இனமொத்தவருக்கு ஆயுதத்தைக் கொடுத்தது எ - று.

வ - று. ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப
3ஐயிலை யெஃக மவைபலவும் - மொய்யிடை


1. சீவக. 2355. 2. தக்க. 622, உரை, மேற். (பி - ம்) .3. 'வேல்வேண்டினபடி கொண்டபுண்' 4. 'மொய்த்தவிர்' ,'மொய்த்தபூண்' 5. 'ஐயிலைவேலெஃகம்'