1ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான் வாட்குடி வன்க ணவர்க்கு. (இ - ள்.) ஐயப்பாட்டை ஒழித்துக் கொலைத்தொழிலையுடைய வெய்யகாலன் உணவுபெற்றேனென்று ஆர்த்துக்கொள்ள வியக்கத்தக்க இலைத்தொழிலான்மிக்க வேல் பலவற்றையும் பூசலிடத்து ஆளைக் கடியும் போர் வெல்லும் யானையினையுடைய தலைவன் வழங்கித் தலையளி செய்தான் மறக்குடியில் தறுகணவர்க்கு எ - று. (4) 65. இதுவுமது கொடுத்தபின்னர்க் கழன்மறவர் எடுத்துரைப்பினு மத்துறையாகும். (இ - ள்.) அரசன் படைவழங்கின பின்னர்க் கழல்வீரர் உயர்த்துச் சொல்லினும் முன்புசொன்ன துறையேயாம் எ - று. வ - று. துன்னருந் துப்பிற் றொடுகழலார் சூழ்ந்திருப்பத் தன்னம ரொள்வாளென் 6கைதந்தான் - மன்னற்கு மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ் விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து. (இ - ள்.) கிட்டுதற்கரிய வலியினையும் கட்டிய வீரக்கழலினையுமுடையார் தன்னைச் சுற்றியிருப்பத் தனக்கு மேவும் ஒள்ளியவாளை என்7கையிலே தந்தான்; அரசற்குப் பூமியிடமோ தங்காநின்றது, முத்தமாலை யணிந்த கொற்றக்குடைக்கீழ்; சுவர்க்கலோகத்தையும் விரும்புங்கொல் அரசன் எ - று. இஃது, 2"ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்" என்பதனானாம். 3"ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து, வேந்தனும் வேந்து கெடும்" என்பதனால், வேந்து இராச்சியமென்றுமாம். இனி, வேற்று மன்னர்க்கு மண்ணகமோ வைகுதலில்லை; அவரை விண்ணகத்தின்கண் ஏற்றலையும் அரசன் வேண்டுங்கொலென்றுமாம். இப்பொருட்கு மன்னர்க்கென்பது பாடம். (5) 66. 4பெருங்காஞ்சி தாங்குதிறன் மறவர் தத்த மாற்றல் வீங்குபெரும் படையின் வெளிப்படுத்தன்று. (இ - ள்.) எதிர்வரும் படையினைத் தடுக்கும் வலியினையுடைய கொடுவினையாளர் தத்தம் வலியை மிக்க பெருஞ்சேனையிடத்துத் தோற்றுவித்தது எ - று. வ - று. வில்லார் குறும்பிடை வேறுவே றார்த்தெழுந்த 5கல்லா மறவர் கணைமாரி - ஒல்லா
1. சீவக. 321. 2. தொல். எச்ச. சூ. 64. 3. குறள். 899. 4. சிலப். 25 : 136. 5. சிறுபாண். 33; மதுரைக். 420. 6. 'கைத்தந்தமன்னர்க்கு' 7. 'கையிலேதந்த அரசற்கு' |