பக்கம் எண் :

வெருவி மறவேந்தர் வெல்களி றெல்லாம்
இருவி வரைபோன்ற வின்று.

(இ - ள்.) விற்படைநிறைந்த அரணிடத்துப் பலவகையாக ஆரவாரித்து வந்த இயற்கையான மறத்தினையுடையாருடைய அம்புமழையைப் பொறாவாய் வெருண்டு சினமன்னர் போரைவெல்லும் யானைபலவும், தினையரிந்த தாளினையுடைய மலையையொத்தன, இந்நாள் எ - று.

(6)

67. வாள்செலவு

அருமுனையா னறைகூவினபின்
செருமுனைமேல் வாள்சென்றன்று.

(இ - ள்.) வெல்லுதற்கரிய போரையுடைய வஞ்சியான் போர்க்கு அழைத்தபின்பு பொருபடையிடத்து வாள்போனது எ - று.

வ - று. உணங்கு புலவறா வொன்னார் குரம்பை
நுணங்கரில் வெம்முனை நோக்கி - அணங்கிய
குந்த மலியும் புரவியான் கூடாதார்
வந்தபின் செல்கென்றான் வாள்.

(இ - ள்.) உலரும் புலானாற்றம் ஒழியாத பகைவர் பாசறைக் கைநிலை செறிந்த பிணக்கத்தையுடைய கானத்திடத்து வெய்யபகையைப் பார்த்துப் பகைவரை வருத்திய வேலிட்டுப் பண்ணுதன்மிக்க குதிரையினையுடைய அரசன் சத்துருக்கள் பொர அடர்ந்தபின்பு வாளினைச் செல்கவென்று ஏவினான் எ - று.

(7)

68. 1குடைசெலவு

முதுகுடி மறவர் முன்னுறச் சூழக்
கொதியழல் வேலோன் குடைசென் றன்று.

(இ - ள்.) பழங்குடிக் கொடுவினையாளர் முன்னே சூழ்ந்துபோக அழலும் நெருப்புப்போன்ற வேலினையுடையவன் குடையைப் புறவீடு விடுத்தது எ - று.

வ - று.2தெம்முனை தேயத் திறல்விளங்குதேர்த்தானை
வெம்முனை வெற்றி 3விறல்வெய்யோன் - தம்முனை
நாட்டிப் பொறிசெறித்து நண்ணார்மேற் செல்கென்று
கூட்டிநாட் கொண்டான் குடை.

(இ - ள்.) பகைப்புலங்கெட, வெற்றிமிகுந்த தேராற்சிறந்த சேனையினையும் வெய்ய பூசல்வெற்றியினையுமுடைய கொற்றத்தை விரும்பியோன் இருபெருவேந்தர்தாம் பொரும்பூசலை இன்னநாளென்று நிச்சயித்துக் கட்டித் தன் இலாஞ்சனையிட்டுப் பகைவர்மேற் போகவெனச் சொல்லிச் சோதிடவருடனேகூட்டி நல்லநாளிலே குடையைப் புறவீடு விட்டான் எ - று.

(8)


1. சிலப். 5 : 91. 2. நன். சூ. 235, மயிலை. மேற். 3. மணி. 26 : 91.