69. 1வஞ்சினக் காஞ்சி வெஞ்சின வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப வஞ்சினங் கூறிய வகைமொழிந் தன்று. (இ - ள்.) வெய்ய கோபத்தையுடைய மன்னவன் பகைவரைத் தாழப் பண்ணுவான் வேண்டி இவ்வாறு செய்வேனெனச் சொல்லிய கூறுபாட்டைச் சொல்லியது எ - று. வ - று. இன்று பகலோ னிறவாமு னொன்னாரை வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் - என்றும் அரணவியப் பாயு மடையார்மு னிற்பேன் முரணவிய முன்முன் மொழிந்து. (இ - ள்.) இற்றைநாள் ஆதித்தன் படுவதன்முன் பகைவரை வெற்றியைச்செய்து போர்க்களத்தைக்கொள்ளாத வேலை எடுப்பேனாயின் எந்நாளும் யானிருந்த அரண்கெடத் தாக்கும் பகைவர்முன்னே நிற்பேனாவேன் மாறுபாடுகெட முன்னே முன்னே தாழவார்த்தைகளைச் சொல்லி எ - று. (9) 70. 2 பூக்கோணிலை காரெதிரிய 4கடற்றானை போரெதிரிய பூக்கொண்டன்று. (இ - ள்.) மேகம் பொருந்திய கடல்போல ஒலிக்குஞ்சேனை பூசலை ஏற்றுக்கொள்வான்வேண்டி அரசன் கொடுத்த பூவினைக்கொண்டது எ - று. வ - று. பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன குருதியா றாவதுகொல் குன்றூர் - கருதி மறத்திறத்தின் மாறா மறவருங் கொண்டார் புறத்திறுத்த வேந்திரியப் பூ. (இ - ள்.) ஆதித்தன் படும் அந்திவானம் உருகிப்பரந்தாலொத்த உதிரநதி ஆவதுபோலும், மலைசூழ்ந்த ஊர்; நினைந்து சினக் கூற்றில் தப்பாத கொடுவினையாளரும் கைக்கொண்டார், தங்களூர்ப்புறத்தே விட்ட வஞ்சி மன்னன்கெடப் பூவினை எ - று. (10) உம்மை : சிறப்பும்மை. 71. தலைக்காஞ்சி மைந்துயர மறங்கடந்தான் பைந்தலைச் 3சிறப்புரைத்தன்று. (இ - ள்.) வலியோங்க மாற்றார்தம் மறத்தொழிலைக் கடந்தவன் பசுந்தலைமதிப்பைச் சொல்லியது எ - று.
1. தொல். புறத். சூ. 24. 2. புறநா. 289 : 9, 341 : 9 . 3. பு - வெ. 88. 4. 'கடற்றானையான்' |