பக்கம் எண் :

வ - று.2விட்டிடனென் வேந்தன்3விலையிடினெ னிவ்வுலகின்
இட்டுரையி னெய்துவ வெய்திற்றால் - ஒட்டாதார்
போர்தாங்கி மின்னும் புலவா ளுறைகழியாத்
தார்தாங்கி வீழ்ந்தான் றலை.

(இ - ள்.) போக்கிடின் என் ? அரசன் தலைக்குத்தக்க விலைகொடுக்கின் என் ? இந்தப்பூமியிற் சிறப்பித்துச் சொல்லும் இசையினாற் பெறுவவெல்லாம் பெற்றதால்; பகைவர் பூசலைத்தடுத்து ஒளியைவிடும் புலால் நாற்றத்தையுடைய வாளை உறையைவிட்டெடுத்து விட்ட வஞ்சியான் தூசிப்படையைத் தடுத்துப் பட்டவனுடைய தலையினை எ - று .

(11)

72. தலைமாராயம்

தலைகொடுவந்தா னுண்மலியச்
சிலையுடைவேந்தன் சிறப்பீந்தன்று.

(இ - ள்.) தலையைக் கொடுவந்தான் மனமுவப்ப வில்லினையுடைய மன்னன் செல்வத்தைக் கொடுத்தது எ - று.

வ - று. உவன்றலை யென்னு முறழ்வின்றி யொன்னார்
இவன்றலையென் றேத்த வியலும் - அவன்றலை
தந்தாற்கு நல்கல் வியப்போ 4கிளந்தேத்தி
வந்தார்க் குவந்தீயும் வாழ்வு.

(இ - ள்.) உவன் இவனுக்கு நேரென்று சொல்லும் ஒப்பின்றிப் பகைவர் எல்லாரிலும் இவன் தலையானவனென்று சொல்லி வாழ்த்த நடக்கும் அவனுடைய தலையைக் கொடுவந்தவற்குச் செல்வங் கொடுத்தல் அதிசயமோ, மிகப் புகழ்ந்துவந்தார்க்கு மகிழ்ந்துகொடுக்குஞ் செல்வம் ! எ - று.

(12)

73. தலையொடு முடிதல்

மண்டமருண் மாறாமைந்திற்
கொண்டான் றலையொடு கோல்வளை முடிந்தன்று.

(இ - ள்.) உற்றபூசலின் ஓவாதவலியினையுடைய கைப்பிடித்தான் தலையுடனே திரண்ட வளையினையுடையாள் இறந்தது எ - று.

வ - று.1கொலையானாக் கூற்றங் கொடிதே கொழுநன்
தலையானா டையலாள் கண்டே - முலையால்
முயங்கினாள் வாண்முகமுஞ் சேர்த்தினா ளாங்கே
உயங்கினா ளோங்கிற் றுயிர்.

(இ - ள்.) கொலைத்தொழிலையமையாத கூற்றம் சாலக் கொடிதாயிருந்தது; கணவனது தலையை அமையாளாய்த் தையலானவள்


1. தொல். புறத். சூ. 19, இளம். மேற். கம்ப. முதற்போர். 236. (பி.ம்.)2. 'விட்டிடிலென்' 3. 'விலையிடிலென்' 4. 'கிளர்ந்தேத்தி'