பக்கம் எண் :

(பார்த்தே கொங்கையாலே தழுவினாள்; ஒளிசிறந்த வதனத்தையும் கூட்டினாள்; அவ்விடத்தே வருந்தினாள்; மேலே பறிந்தது உயிர் எ - று.

ஆதலால் கூற்றம் கொடிதேயென்க.)

கொங்கையாலே தழுவினாள் ஒளி சிறந்த வதனத்தையும் கூட்டினாள், அவ்விடத்தே வருந்தினாள், மேலே பறிந்தது உயிர் எ - று.

ஆதலால் கூற்றம் கொடியேயென்க

(13)

74. 1மறக்காஞ்சி

இலைப்பொலிதா ரிகல்வேந்தன்
மலைப்பொழிய 3மறங்கடைஇயன்று.

(இ - ள்.) பச்சிலையாலே பொலிவுபெற்ற மாலையாற்சிறந்த வலியினையுடைய மன்னன் பகைவர் மாறுபாடு நீங்க மறத்தொழிலைச் செலுத்தியது எ - று.

வ - று. கருந்தலையும் வெண்ணிணமுஞ் செந்தடியு மீராப்
பருந்தோ டெருவை படர - அருந்திறல்
வேறாய மன்னர் வியப்பக் கடாயினான்
மாறா மறவன் மறம்.

(இ - ள்.) கறுத்த தலையையும் வெள்ளைநிணத்தையும் சிவந்த தசையையும் இழுத்துக்கொண்டு பருந்தும் கழுகுஞ்செல்ல அரியவெற்றியினையுடைய பகைவர் அதிசயிப்பச்செலுத்தினான் நீங்காத கொடுவினையாளன் மறத்தொழிலை எ - று.

(14)

75. இதுவுமது

மண்கெழு மறவன் மாறுநிலை நோனான்
புண்கிழித்து முடியினு மத்துறை யாகும்.

(இ - ள்.) 4ஒப்பனையாற்பொலிந்த மறத்தொழிலையுடைய வீரன் பகைவருடைய மாறுபாட்டுக்குப் பொறானாகிப்5பகைவர்வேல்பட்ட தன் மார்பிற் புண்ணைப் பிளந்து மரிப்பினும் முற்பட்ட துறையேயாம் எ - று.

வ - று.2நகையம ராய நடுங்க நடுங்கான்
தொகையம ரோட்டிய துப்பிற் - பகைவர்முன்
நுங்கிச் சினவுத னோனா னுதிவேலாற்
பொங்கிப் பரிந்திட்டான் புண்.

(இ - ள்.) மகிழ்ச்சிமேவும் தன் கூட்டம் குலையக் குலையானாய்ச் செறிந்த போரைத் துரந்த வலியினையுடைய மாற்றார் தன்முன்னெல்லையைக்கொண்டு கோபித்தலைப் பொறானாகி வேலின்நுதியாலே வெகுண்டு அறுத்திட்டான், புண்ணினை எ - று.

(15)


1. தொல். புறத். சூ. 19, இளம். மேற். 2. சிறுபாண். 220. (பி.ம்.) 3. 'மறங்கடாயின்று' 4. 'பூமியிலே பொருந்திய' 5. 'வேலினாலே புண்கிழித்து முடியினும் அத்துறையேயாம்'