வ - று. கொன்றுருத்த கூர்வே லவற்குறுகிக் கூரிருள்வாய் நின்றுருத்து நோக்கி நெருப்புமிழாச் - சென்றொருத்தி ஒட்டார் படையிடந்த வாறாப்பு ணேந்தகலம் தொட்டாள் பெருகத் துயில். (இ - ள்.) கொலைத் தொழில் செய்து வெகுண்டகூரியவேலினை உடையவனைக் கிட்டி மிக்க இருளின்கண்ணே நின்று கோபித்துப் பார்த்து அழலைக் கான்று அணுகப்போய் ஒரு பேய்மகள் பகைவர் ஆயுதம் பிளந்த தீராத புண்ணைத் தாங்கின மார்பினைத் தீண்டினாள், உறக்கம் மிக எ - று. உறக்கமிகுதல் - உயிர்போதல். (18) 79. 1தொடாக் காஞ்சி அடலஞ்சா நெடுந்தகைபுண் தொடலஞ்சித் துடித்துநீங்கின்று. (இ - ள்.) கொலையஞ்சாத பெரிய நிலையினையுடையவன் புண்ணினைத் தீண்டுதற்குப் பயப்பட்டு நடுங்கிப் பேய் பெயர்ந்தது எ - று. வ - று.2ஐயவி சிந்தி 3நறைபுகைத் தாய்மலர் தூய்க் கொய்யாக் குறிஞ்சி பலபாடி - மொய்யிணர்ப் பூப்பெய் தெரிய னெடுந்தகைபுண் யாங்காப்பப் பேய்ப்பெண் பெயரும் வரும். (இ - ள்.) வெண்சிறுகடுகினைத்தூவிக் குங்கிலியமுதலான நறுநாற்றத்தைப் புகைத்துத் தெரிந்த பூவினைச்சிதறிப் பறியாக்குறிஞ்சிப்பண் பலவும்பாடிச் செறிந்த தொத்தினையுடைய மலரிட்டுத் தொடுத்த மாலை யானிறைந்த பெரிய மேம்பாட்டினையுடையவன் புண்ணை யாங்கள் பரிகரிப்பப் பேய்மகள் நீங்கும், அணுகும் எ - று. கொய்யாக்குறிஞ்சி : வெளிப்படை. (19) 80. 4மன்னைக் காஞ்சி வியலிடமருள விண்படர்ந்தோன் இயல்பேத்தி யழிபிரங்கின்று. (இ - ள்.) அகன்ற பூமியினுள்ளார் மயங்க வீரசுவர்க்கத்தே சென்றவன் பண்பினைப் புகழ்ந்து நொந்து வருந்தியது எ - று. வ - று.5போர்க்குப் புணைமன் புரையோர்க்குத் தாணுமன் ஊர்க்கு முலகிற்கு மோருயிர்மன் - யார்க்கும் அறந்திறந்த வாயி லடைத்ததா லண்ணல் நிறந்திறந்த நீளிலை வேல். (இ - ள்.) பூசலுக்குத் தெப்பமனையவன், உயர்ந்தோர்க்குத் தாணு வொப்பானவன், தன் பதிக்கும் பூமிக்கும் ஓருயிரை யனையவன்.
1. தொல். புறத். சூ. 24. 2. புறநா. 281 : 4-7. 3. முருகு. 239. 4. தொல். புறத். சூ. 24; புறநா. 235. 5. தொல். வேற்றுமையியல், சூ. 15, ந. மேற். |