பக்கம் எண் :

வென்று விளங்கும் கண்ணாடி நிரைத்த கிடுகுபடை வணங்காதார் முனைக் குறும்பினைக் கொள்ளவேண்டிற் கொள்கை எளிதென்று சொன்னான் மன்னன் எ - று.

ஆதலால் இன்று நாம் வைகல் இழிவாகுமென்க. தோலென்பது ஆகுபெயர்.

(12)

107. குற்றுழிஞை

1கருதாதார் மதிற்குமரிமேல்
ஒருதானாகி யிகன்மிகுத்தன்று.

(இ - ள்.) பகைவர் அரணாகிய அழிவில் லாததன்மேல் தான் ஒருவனுமேயாகி மாறுபாட்டினைப் பெருக்கியது எ - று.

வ - று. குளிறு முரசினான் கொண்டா னரணம்
களிறுங் கதவிறப் பாய்ந்த - ஒளிறும்
அயிற்றுப் படைந்த 2வணியெழு வெல்லாம்
3எயிற்றுப் படையா லிடந்து.

(இ - ள்.) அதிரும் வீரமுரசினையுடையான் வென்று கைப்பற்றினான் குறும்பினை; போர்யானைகளும் வாய்தலிற் கதவு ஒடியப் பாய்ந்தன; விளங்கும் வேல்வலிசிறந்த நிரைத்த கணைய முழுதும் மருப்பாயுதத்தாலே பெயர்த்து எ - று.

(13)

108. இதுவுமது

வளைஞரல வயிரார்ப்ப
மிளைகடத்தலு மத்துறையாகும்.

(இ - ள்.) சங்கம் முழங்கக் கொம்பு குறிப்பக் காவற்காட்டைக் கடந்து புகுமதுவும் முன்னஞ்சொன்ன துறையேயாம் எ - று.

வ - று. அந்தரந் தோயு வமையோங் கருமிளை
மைந்தர் மறிய மறங்கடந்து -பைந்தார்
விரைமார்பின் வின்னரல வெங்கணை தூவார்
வரைமார்பின் வைகின வாள்.

(இ - ள்.) ஆகாயத்தைக் கிட்டும் மூங்கிலுயர்ந்த அரிய காவற் காட்டிற் பொரும் வீரர் முதுகிட மறத்தை வென்று செவ்விமாலை மணத்தையுடைய அகலத்திலே வின்னாணொலிப்ப வெவ்விய அம்பைச் சிந்துவாருடைய மலைபோன்ற அகலங்களிலே தங்கின, உழிஞை யாருடைய வாள்கள் எ - று.

தூவுவாரென்பது தூவாரென இடைக்குறைந்தது.

(14)

109. இதுவுமது

பாடருந்தோற் படைமறவர்
ஆடலொடடையினு மத்துறையாகும்.


1. "வணங்காதார் மதிற்குமரி" பு.வெ. 122. 2. புறநா. 14:2. 3. எயிற்றுப்படை: சீவக. 2164.