(இ - ள்.) சொல்லுதற்கரிய பரிசையினையுடைய சேனைத்தலைவர் ஆடுதலுடனே நொச்சியாருடைய அரணினைக் குறுகினும் முன்பு சொன்ன துறையேயாம். வ - று. நிரைபொறி வாயி னெடுமதிற் சூழி வரைபுகு புள்ளின மான-விரைபடைந்தார் வேலேந்து தானை விறலோன் விறன்மறவர் தோலேந்தி யாட றொடர்ந்து. (இ - ள்.) ஒழுங்குபட்ட இயந்திரங்களாலமைந்த 3புதவினையுடைய உயர்ந்த புரிசைநெற்றியிலே மலையிடத்துச்சென்றுபுகும் புட்களை யொப்பக் கடுகிக்கிட்டினார், வேலினையுயர்த்த சேனையால் நிறைந்த வெற்றியினையுடையோன் வென்றிவீரர்; கிடுகினையெடுத்துத் தாம் ஆடுதலைச் சூழ்ந்து. எ - று. தொடர்ந்து விரைபு அடைந்தாரென்க. (15) 110. புறத்துழிஞை விண்டோயு மிளைகடந்து குண்டகழிப் புறத்திறுத்தன்று. (இ - ள்.) ஆகாயத்தைக் கிட்டும் காவற்காட்டைக் கடந்து ஆழ்ந்த கிடங்கின் கரையிலேவிட்டது. வ - று. கோள்வாய் முதலைய குண்டகழி நீராக வாள்வாய் மறவேந்தன் வந்திறுத்தான்-நீள்வாயில் ஓங்க லரணத் தொளிவளையார் வெய்துயிர்ப்ப ஆங்கொ லரிய வமர். (இ - ள்.) ஆளைப் பற்றுகை தப்பாத முதலையினையுடைய குழிந்த அகழே தண்ணீராக வாய்த்த வாளினையுடைய மறமன்னன் வந்து விட்டான்; நீண்ட 1வாய்தலாற் சிறந்த உயர்ச்சியினையுடைய மதிலிடத்து ஒள்ளியவளையினையுடையார் வெய்தாக உயிர்ப்ப வெல்லுதற்கரிய பூசல் ஆம்போலும். எ - று. (16) 111. பாசிநிலை அடங்காதார் மிடல்சாயக் 4கிடங்கிடைப் போர்மலைந்தன்று. (இ - ள்.) பகைவருடைய வலி கெட அகழியிடத்துப் பூசலை மேற்கொண்டது வ - று.2நாவாயுந் தோணியு மேல்கொண்டு நள்ளாதார் ஓவார் விலங்கி யுடலவும்-பூவார்
1. வாய்தல்-வாசல். 2. தொல். புறத். சூ. 11, இளம். மேற். (பி-ம்)3. 'புகலினையுடைய' 4. 'கிடங்கினுட்' |