பக்கம் எண் :

அகழி பரந்தொழுகு மங்குருதிச் சேற்றுப்
பகழிவாய் வீழ்ந்தார் பலர்.

(இ - ள்.) ஓடமும் 1ஒருமரத்தோணியும் மேல்கொண்டு பொருந்தாதார் ஒழியாராய் விலங்கி வெகுளவும் மலர்நிறையும் கிடங்கிலே மிக்கோடும் அழகிய சோரியளற்று அம்பின் வாயிலே பட்டார் அநேகர். எ - று.

(17)

112. ஏணிநிலை

தொடுகழன் மறவர் துன்னித் துன்னார்
இடுசூட் டிஞ்சியி னேணிசாத் தின்று.

(இ - ள்.) இட்ட வீரக்கழலினையுடைய கொடுவினையாளர் செறிந்து செறியாதார் பண்ணின ஏவறைகளையுடைய மதிலிலே ஏணியைச் சாத்தியது. எ - று.

சூட்டு-மாலை யென்றுமாம்.

வ - று.2கற்பொறியும் பாம்புங் கனலுங் கடிகுரங்கும்
விற்பொறியும் வேலும் விலக்கவும்-பொற்புடைய
பாணி நடைப்புரவிப் பல்களிற்றார் சாத்தினார்
ஏணி பலவு மெயில்.

(இ - ள்.) இடங்கணியும் அரவும் நெருப்பும் கடிகுரங்கும் வில் இயந்திரமும் அயிலும் இவையனைத்தும் பகைவர் உட்புகுதாதபடி விலக்கவும் பொலிவினையுடைய தாளத்திற்கொக்கச் சதிபாயும் குதிரையினையும் பல யானையினையுமுடைய உழிஞையார் இட்டார்; அரணிடத்து ஏணி பலவும். எ - று.

ஏணிபலவும் சாத்தினாரென்க.

113. எயிற்பாசி

உடல்சினத்தார் கடியரணம்
மிடல்சாய மேலிவர்ந்தன்று.

(இ - ள்.) முனையும் செற்றத்தினையுடையார் காவற்குறும்பு வலிகெட ஏணிமேல்ஏறியது

வ - று.3சுடும ணெடுமதில் சுற்றிப் பிரியார்
கடுமுர ணெஃகங் கழிய -அடுமுரண்
ஆறினா ரன்றி யரவு முடும்பும்போல்
ஏறினா ரேணி பலர்.

(இ - ள்.) செங்கலாற் செய்த நெடிய புரிசையைச் சூழ்ந்து நீங்காராய்க் கொடிய மாறுபாட்டினையுடைய வேல் மார்பிலேபட்டு உருவிப் போகக் கொல்லும் மாறுபாடு ஆறினாரொழியப் பாம்பும் உடம்பு மொப்ப ஏணிமேல் ஏறினார் அநேகர். எ - று.


1. பெரும்பாண். 433 2. சீவக. 101-4; சிலப். 15: 207-17; திருவிளை. நகர. 24-9. 3. தொல். புறத். சூ. 11, இளம். மேற்: சுடுமண்: பெரும்பாண். 405; சிலப். 14: 146; மணி. 3: 127