பக்கம் எண் :

ஆர்கழன் மன்ன னலங்குளைமா வெஞ்சிலை
வார்கணையின் முந்தி வரும்.

(இ - ள்.) பகைவர்தம் சவளப்படையும் கொடியவிற்படையும்உதிரத்தை அளைந்தவேற்படையும் வந்தபடி அறியாதவகைதலைமயங்கிய வாட்போருள் வெய்யவலியினையும் நிறைந்தவீரக்கழலினையுமுடைய மன்னன் விளங்கும் தலையாட்டத்தினையுடையகுதிரை, கொடியவில்லில் தொடுத்துவிட்ட நீண்ட அம்புபோலமுற்பட்டு வரும் எ - று.

(7)

134. தார்நிலை

முன்னெழுதரு படைதாங்குவனென
மன்னவற்கு மறங்கிளந்தன்று.

(இ - ள்.) தூசிப்படையைத் தடுப்பனென அரசற்குஒரு வீரன் தனது தறுகண்மையைச் சொல்லியது எ - று.

வ - று. உறுசுடர் வாளோ டொருகால் விலங்கின்
சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டாய் - எறிசுடர்வேற்
றேங்குலாம் பூந்தெரியற் றேர்வேந்தே நின்னோடு
பாங்கலா மன்னர் படை.

(இ - ள்.) மிக்க ஒளியினையுடைய வாளுடனேயான் ஒருகால் தடுப்பிற் சிறிய விளக்கின் முன்னர்பெரிய இருள்போல இரிந்தோடுங் காண்; எறியும் கதிர்வேலினையும்மதுமலர்ந்த பூமாலையினையுமுடைய தேர் மன்னனே ,நின்னோடு உறவல்லாத வேந்தர்சேனை எ - று.

(8)

135. இதுவுமது

ஒருகுடை மன்னனைப் பலகுடை நெருங்கச்
செருவிடைத் தமியன் றாங்கற்கு முரித்தே.

(இ - ள்.) ஒரு குடைவேந்தனைக் குடைவேந்தர்பலர் அடையப்போரிடத்துத் தனிவீரன் தானே தடுத்தற்குமுரித்துஅத்துறை எ - று.

(வ - று.)காலான் மயங்கிக் கதிர்மறைத்த கார்முகில்போல்
வேலான்கை 1வேல்பட வீழ்ந்தனவே - தோலா
இலைபுனை தண்டா ரிறைவன்மேல் வந்த
மலைபுரை யானை மறிந்து.

(இ - ள்.) காற்றால் நிலைகுலைந்து ஆதித்தனைமறைத்த கருமுகில் போல, வேல்வீரன் கையகத்து வேல்படுதலால்வீழ்ந்தன; தோலாத இலையாற்றொடுத்த குளிர்ந்தமாலையினையுடைய அரசன்மேற் சென்ற 2மலையையொத்தஆனை கீழ்மேலாய் எ - று.

(வ - று.) வந்தவென்பது இடவழுவமைதி
கார்முகில்போற் சென்ற யானையென்க

(9)


(பி.ம்.)1. 'வேல்விட' 2. 'மலையையொத்த அயிராபதம்'