136. தேர்மறம் முறிமலர்த்தார் வயவேந்தன் செறிமணித்தேர்ச் சிறப்புரைத்தன்று. (இ - ள்.) தளிர் விரவின பூமாலையினையுடையவலிய மன்னன் மிடைந்த மணித்தேரின் நன்மையைச்சொல்லியது எ - று. வ - று. செருமலி வெங்களத்துச் செங்குருதிவெள்ளம் அருமுர ணாழி 2தொடர - வருமரோ கட்டார் கமழ்தெரியற் காவலன் காமர்தேர் ஒட்டார் புறத்தின்மே லூர்ந்து. (இ - ள்.) போர்மிகும் வெய்ய பறந்தலையிடத்துச்சிவந்த உதிரவெள்ளம் கிட்டுதற்கரிய மாறுபாட்டினையுடையதேர்க்காலைத்தொடரவாரா நிற்கும்; சுற்றுதல் நிறைந்தநாறும் மாலையினையுடைய அரசன்றன் அழகிய தேர் ,பகைவர் பிணப்புறத்தின்மேல் நடந்து எ - று. அரோ : அசை. (10) 137. பாண்பாட்டு வெண்கோட்ட களிறெறிந்து செங்களத்துவீழ்ந்தார்க்குக் கைவல்யாழ்ப் பாணர் கடனிறுத் தன்று. (இ - ள்.) விளர்த்த கொம்பினையுடைய யானையைஎறிந்து பறந்தலையிற் பட்டார்க்குயாழ்வாசிக்கும் கைத்தொழிலில் வல்ல பாணர் உரிமைசெய்ததுஎ - று. வ - று. தளரிய றாய்புதல்வர் தாமுணராமைக் களரிக் கனன்முழங்க மூட்டி - 1விளரிப்பண் கண்ணினார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்க்கு விண்ணினார் செய்தார் விருந்து. (இ - ள்.) தளர்ந்த இயல்பினையுடைய தம்மனைவி தாய் சிறுவர் இவர் தாம் போர்க்களத்துப்பட்டவாறு அறியாமையாற் பறந்தலையிலே நெருப்பைமுழங்கமூட்டிச் சாப்பண்ணைப் பாடக்கருதினார் பாணர், யானையை எறிந்து பட்ட வீரர்க்கு; துறக்கத்துள்ளார்விருந்திடுதல் செய்தார் எ - று . (11) 138. இருவருந் தபுநிலை பொருபடை களத்தவிய இருவேந்தரு மிகலவிந்தன்று. (இ - ள்.) போர்செய்யும் சேனையிரண்டும்களத்திற்பட இருவர் அரசரும் மாறுபாட்டாற் பட்டது எ - று.
1. இரங்கற்பண்; "நுளையர்விளரி நொடிதருந் தீம்பாலை" (சிலப். 7 : 48. ) (பி - ம்) 2. 'துடர' |