வ - று.1காய்ந்து கடுங்களிறுகண்கனலக் கைகூடி வேந்த ரிருவரும் விண்படர - ஏந்து பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி இருபடையு நீங்கா விகல். (இ - ள்.) கனன்று கடிய யானை கண்ணழலக் கண்ணுற்று அரசரிருவரும் விண்ணைச்சேர எடுக்கும் போர்செய்யும்படைஒளிவிட வென்னிடாவாகி வெகுண்டு இரண்டுசேனையும் ஒழியாவாயின, மாறுபாட்டை எ - று. (12) அரசும் படையும் மடிந்தவாம். 139. எருமை மறம் 2வெயர்பொடிப்பச் சினங்கடைஇப் பெயர்படைக்குப் பின்னின்றன்று. (இ - ள்.) வேரரும்பச் சினத்தைக் கடாவிமுதுகிட்ட தன் சேனைக்குப் பின்னே நின்றது எ - று. வ - று. கடுங்கண் மறவன் கனல்விழியாச்சீறி நெடுங்கைப் பிணத்திடை நின்றான் - நடுங்கமருள் ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி வாள்வெள்ளந் தன்மேல் வர. (இ - ள்.) தறுகண்வீரன் நெருப்புப்போல்விழித்துக் கோபித்து நெடிய கையையுடைய யானைப்பிணத்தின்நடுவே நின்றான்; கண்டார் நடுங்கும் போரிடத்துக்காலாள் வெள்ளம் இரிந்தோடவும் போகானாகித் தன்கைவேலை ஊன்றி, பகைவர் வாட்படைவெள்ளம் தன்மேலேஅடர்ந்துவர எ - று . (13) 140. ஏம வெருமை குடைமயங்கிய வாளமருட் படைமயங்கப் பாழிகொண்டன்று. (இ - ள்.) மன்னர்குடைகள் தம்மில் தலைமயங்கிய வாட்போருள் தான் எறிந்தவேல் பொருகளிற்றின்மத்தகத்துக் குளிப்பத் தோள் வலியால் வெற்றிகொண்டதுஎ - று. வ - று. மருப்புத்தோ ளாக மதர்விடையிற்சீறிச் செருப்புகன்று செங்கண் மறவன் - நெருப்பிமையாக் 3கைக்கொண்ட வெஃகங் கடுங்களிற்றின் மேற்போக்கி மெய்க்கொண்டான் பின்னரு மீட்டு. (இ - ள்.) தோளே கொம்பாக மதர்த்த எருமையேறுபோல வெகுண்டு போரைவிரும்பிச் சிவந்த கண்ணினையுடையமறவன், பொறிபிறப்ப விழித்துக் கையிலேந்திய வேலைக்கடிய யானைமேல்விட்டு முன்பு வென்றி கொண்டவாறுபோல நிராயுதனாகி நின்று மெய்வலியாற் பின்னரும்வென்றிகொண்டான்; மேல்வரும் படையை விலக்கி எ - று. 31"படையறுத்துப் பாழிகொள்ளுமேமம்" என்றாராசிரியர் . (14)
1. தொல். புறத். சூ. 14, இளம். மேற். 2. "மெய்யது வியரே" (புறநா.100-2) 3. புறநா. 274 " 3; குறள். 774. |