பக்கம் எண் :

141. நூழில்

கழல்வேந்தர் படைவிலங்கி
அழல்வேறிரித் தாட்டமர்ந்தன்று.

(இ - ள்.) வீரக்கழன்மன்னர் சேனையைக்கொன்றுஅழலும்வேலைத் திரித்து ஆடுதலை விரும்பியது எ - று.

வ - று. ஆட லமர்ந்தா னமர்வெய்யோன்வீழ்குடர்
சூடன் 2மலைந்த சுழல்கட்பேய் - மீடல்
மறந்தவேன் ஞாட்பின் மலைந்தவர் 2மார்பம்
திறந்தவேற் கையிற் றிரித்து.

(இ - ள்.) ஆடுதலை மேற்கொண்டான் போரைவிரும்பினோன்; வீழ்ந்த குடரைச் சூடுதலை மேற்கொண்டனசுழலும் விழியினையுடைய பேய், மீளுத லொழிந்த வேற்பொருள்மாறுபட்டவர் மார்பத்தை உருவின வேலைக் கையிலேதிரித்து எ - று .

(15)

142. நூழிலாட்டு

களங்கழுமிய படையிரிய
5உளங்கிழித்தவேல் பறித்தோச்சின்று.

(இ - ள்.) பொருகளத்தைப் பொருந்திய சேனைகெடத்தன் மார்பத்தைத் திறந்து வேலைப் பறித்து எறிந்தது எ - று.

வ - று. மொய்யகத்து மன்னர் முரணினியென்னாங்கொல்
கையகத்துக் கொண்டான் கழல்விடலை - வெய்ய
விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த
படுசுட ரெஃகம் பறித்து.

(இ - ள்.) போரிடத்து வேந்தர் மாறுபாடு இனிஎன்னாமோ ! கையிடத்துப்பற்றினான் கழல்வீரன் ;வெய்தான மிகுங்கனலைச் சிதறி மணநாறு மார்பத்தைப்போழ்ந்த ஒளிதோன்றும் வேலைப் பறித்து எ - று.

(16)

143. முன்றேர்க் குரவை

எழுவுறழ் திணிதோள் வேந்தன் வெஃறேர்
முழுவலி வயவர் முன்னா டின்று.


1. தொல். புறத். சூ. 17. 2. குறள். 774. (பி - ம்)3. 'படைமறுத்து' 4. 'மலிந்த' 5. 'உளங்கழிந்த'