(இ - ள்.) இரண்டுசேனையும் மறத்தை ஏத்தப்போர்க்களத்துச் சிறப்பெய்தியது. எ - று. (வ - று.) நேரார் படையி னிலைமை நெடுந்தகை ஓரா னுறைகழியா னொள்வாளும்- தேரார்க்கும் வெம்பரிமா வூர்ந்தார்க்கும் வெல்களிற்றின் மேலார்க்கும் கம்பமா நின்றான் களத்து. (இ - ள்.) பகைவர்சேனையின் உரத்தைப் பெரியமேம்பாட்டினையுடையவன் விசாரியான், வாளும் உறையினின்றும் வாங்கான், தேர்வீரர்க்கும் வெய்ய செலவினையுடைய குதிரையைச் செலுத்தினார்க்கும் வெல்லும் யானையின் மேலார்க்கும் நிலைத்தூண்போலக் களத்தின்கண்நின்றான். எ - று. கம்பம்- நடுக்கமுமாம். (22) 149. வெருவரு நிலை விலங்கமருள் வியலகலம்வில்லுதைத்த கணைகிழிப்ப நிலந்தீண்டா வகைப்பொலிந்த நெடுந்தகை நிலையுரைத்தன்று. (இ - ள்.) பகையைத்தடுக்கும் பூசலிடத்து அகன்றமார்பகத்தை வில் உமிழ்ந்த அம்புபிளப்பநிலத்தைத் தீண்டாதபடி சிறந்தபெரிய மேம்பாட்டினை உடையான்றனது நிலைமையைச் சொல்லியது எ - று. (வ - று.) வெங்கண் முரசதிரும் வேலமருள்வில்லுதைப்ப எங்கு மருமத் 1திடைக்குளிப்பச் - செங்கட் புலவா ணெடுந்தகை பூம்பொழி லாகம் கலவாமற் காத்த கணை. (இ - ள்.) வெவ்விய கண்ணினையுடைய முரசு முழங்கும்வேற்போருள் விற்செலுத்த உயிர்நிலையான எவ்விடத்தும்தைப்பச் சிவந்த கண்ணினையும் புலால் நாறும்வாளினையு முடையனாகிப் பெரிய தகைமையாற் சிறந்தவன் பொலிவுபெற்ற பார்மடந்தை மார்பினைக்கூடாதபடி, ஏற்றுக் கொண்டன அம்பு. வில்லுதைப்பத் தைத்துருவின அம்புகாத்தவென்க. (23) 150. சிருங்கார நிலை பகைபுகழக் கிடந்தானை முகைமுறுவலார் முயக்கமர்ந்தன்று. (இ - ள்.) பகைவர் சீர்த்திபண்ணக் கிடந்தானை2முல்லைமொட்டுப் போன்ற பல்லினார்தழுவுதலை மேவியது எ - று. (வ - று.) எங்கணவ னெங்கணவ னென்பா ரிகல்வாடத் தங்கணவன் றார்தம் முலைமுகப்ப - வெண்கணைசேர்
(பி - ம்)1. 'திடைகுளிப்ப' 2. 'முல்லையரும்பன்ன' |