புண்ணுடை மார்பம் பொருளகத்துப்புல்லினார் நுண்ணிடைப் பேரல்கு லார். (இ - ள்.) எம்முடைய கணவன் எம்முடைய கணவனென்றுசொல்லும் பரத்தையர் மாறுபாடுகெடத் தமது கொழுநன் மாலை தம்முலை முகந்துகொள்ள வெய்ய அம்புபட்ட புண்ணினையுடைய மார்பகத்தைப் போர்க்களத்துத் தழுவினார் ;நுண்ணிய இடையினையும் பெரிய அல்குலினையுமுடைய குலமகளிர் எ-று. எங்கணவ னெங்கணவ னென்பார் தெய்வமகளிரென்றுமாம். (24) 151. உவகைக் கலுழ்ச்சி வாள்வாய்த்த வடுவாழ்யாக்கைக் கேள்கண்டு கலுழ்ந்துவந்தன்று. (இ - ள்.) வாளால் வாய்ப்புப் பெற்றவிழுப்புண்மிக்க உடம்புடைய கணவனைக்கண்டு மனைவிமகிழ்ந்து கண்ணீர் வீழ்த்தது எ-று. (வ - று.) வெந்தொழிற் கூற்றமு நாணின்றுவெங்களத்து வந்த மறவர்கை வாடுமிப்பப்- பைந்தொடி ஆடரிமா வன்னான் கிடப்ப வகத்துவகை ஓடரிக்க3 ணீர்பா யுக. (இ - ள்.) வெய்ய செய்தியினையுடைய கூற்றமும் நம்மிடத்தும் இவ்வாறு மறமில்லையென்று மானித்தது. வெவ்விய போர்க்களத்துப் போர்செய்யவந்த தறுகண்ணர் கையிடத்து வாள் துணிசெய்யப் பச்சை வளையினையுடையமனைவி தன் வென்றிச்சிங்கத்தையனைய கொழுநன் கிடப்ப அவன் வெற்றிக் கிடக்கைகண்ட உள்ளத்து மகிழ்ச்சியாற் செவ்வரி கருவரிபரந்த கண்ணகலமெல்லாம் நீர்பரந்துவீழ எ-று. உகக் கூற்றமு நாணின்றென்க. (25) 152. 1தன்னை வேட்டல் தம்மிறைவன் விசும்படைந்தென வெம்முரணா னுயிர்வேட்டன்று. (இ - ள்.) தம் வேந்தன் விசும்பைச் சேர்ந்தானாக, வெய்ய மாறுபாட்டை யுடையானொருவீரன் உயிரை ஆகுதிபண்ணியது எ-று. (வ - று.)2வான மிறைவன் படர்ந்தெனவாடுடுப்பா மானமே நெய்யா மறம்விறகாத்- தேனிமிரும் கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர் ஒள்ளழலுள் வேட்டா னுயிர்.
1. இத்துறை தன்னுறுதொழிலின் பாற்படும். 2. தொல். புறத். சூ. 14, இளம், மேற். (பி - ம்)3. 'ணீராயுக' |