பக்கம் எண் :

ஒன்றின முடித்தல் தன்னின முடித்தலென்பதனால், ஒருவனை அவனோடு உவமைகூறினும் பிறகடவுளரோடு உவமைகூறினும்அதுவேயாம். இனிக் காவற்கடவுளாகக் காவலனைக் கூறின்என்னாமோவெனின், கற்பகம்போல்வானைக் கற்பகமென்பதுபோலாம் எ-று.

(4)

193. பரிசிற்றுறை

மண்ணகங் காவன் மன்னன் முன்னர்
எண்ணிய பரிசி லிதுவென வுரைத்தன்று.

(இ - ள்.) பூமியிடத்தைக் காக்கும் தொழிலையுடைய அரசன் முன்னே கருதிய பேறுஇதுவெனச் சொல்லியது எ-று.

வ - று. வரிசை கருதாது வான்போற் றடக்கைக்
குரிசினீ நல்கயாங் கொள்ளும் - பரிசில்
அடுகள மார்ப்ப வமரோட்டித் தந்ந
படுகளி நால்வாய்ப் பகடு.

(இ - ள்.) எங்கள் தரத்தினை நினையாதே,மழையை யொக்க வழங்கும் பெரிய கையினையுடைய உபகாரி,நீ வழங்க யாங்கள்பெறும் பேறு கொல்லும் களரியிலேஆரவாரிப்பப் போரிடத்தே பகைவரைக் கெடுத்துக்கைக்கொண்ட உண்டான மதத்தினையும் நான்றவாயினையுமுடைய யானை எ-று.

யானை யாம் கொள்ளும் பரிசிலென்க.

(5)

194. இயன்மொழி வாழ்த்து

இன்னோ ரின்னவை கொடுத்தார்நீயும்
அன்னோர் போல வமையெமக் கீகென
என்னோரு மறிய வெடுத்துரைத் தன்று.

(இ - ள்.) இத்தன்மையோர் இத்தன்மை வழங்கினார்,நீயும் அத்தன்மையோர்போல் அப்படியான பொருள்களைஎமக்குத் தருவாயாகவென்று சொல்லி எத்தன்மையோரும்உணர உயர்த்துச் சொல்லியது எ-று.

வ - று.1முல்லைக்குத் தேரு மயிலுக்குப்போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை
இரவாம லீந்த 2விறைவர்போ னீயும்
கரவாம லீகை கடன்.

(இ - ள்.) முல்லைக்குப் பொற்றேரும் மயிலுக்கு மணிப்படாமும் எல்லை கடலாகவுடைய வையகத்துக் கீர்த்திவிளங்க முற்காலத்து வேண்டாமே கொடுத்தஉபகாரிகளை யொப்ப நீயும் ஒளியாது வழங்கல் கடன்எ-று.

(6)


1. பழ. 361. 2. இறைவர் : பாரி, பேகனென்பார்; சிறுபாண். 84-91; புறநா. 200, 201, 141, 145.