பக்கம் எண் :

195. இதுவுமது

மயலறு சீர்த்தி மான்றேர் மன்னவன்
இயல்பே மொழியினு மத்துறை யாகும்.

(இ - ள்.) மயக்கமற்ற மிக்கபுகழினையும் குதிரையாற் பூட்டப்பட்ட தேரினையுமுடையஅரசன் தன்மையினைச் சொல்லினும் முன்பு சொன்னதுறையேயாம் எ-று.

(வ - று.) ஒள்வா ளமரு ளுயிரோம்பான்றானீயக்
கொள்வார் நடுவட் கொடையோம்பான் - வெள்வாள்
கழியாமே மன்னர் கதங்காற்றும் வேலான்
ஒழியாமே யோம்பு முலகு.

(இ - ள்.) ஒள்ளிய வாட்பூசலிடத்து உயிரைப்பாதுகாவான், தான் கொடுப்ப ஏற்பாரிடை வழங்குதலைப்பரிகரியான், தெளிந்தவாளை உறையினின்றும் வாங்காமே அரசர்கோபத்தைக் கால்விக்கும் வேலினையுடையான்தப்பாமே காக்கும், உலகத்தை
எ - று.

(7)

196. கண்படைநிலை

நெடுந்தேர்த் தானை நீறுபட நடக்கும்
கடுந்தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று.

(இ - ள்.) உயரிய தேரான் மிக்க பகைவர்சேனை பொடிபடச் செல்லும் கடுந்தேரினையுடைய வேந்தனது துயிலை மிகுத்தது எ - று.

(வ - று.)1மேலா ரிறையமருண்மின்னார் சினஞ்சொரியும்
வேலான் விறன்முனை வென் றடக்கிக் - கோலாற்
கொடிய வுலகிற் குறுகாமை யெங்கோன்
கடியத் துயிலேற்ற கண்.

(இ - ள்.) வீரர் தங்கிய போரிடத்து ஒளிநிறைந்து செற்றம்பொழியா நிற்கும் வேலாலே வலியபூசலைச் சயித்து ஒடுக்கிச் செங்கோனீதியாற் கொடியவை பூமியிடத்துக் கிட்டாமை எம்முடைய அரசன் நீக்குதலான் உறக்கத்தை மேவின, விழிகள் எ - று.

(9)

197. துயிலெடைநிலை

அடுதிறன் மன்னரை யருளிய வெழுகெனத்
தொடுகழன் மன்னனைத் துயிலெடுப் பின்று.

(இ - ள்.) கொல்லும் வலியினையுடைய வேந்தர்க்குஅருள எழுந் திருப்பாயாகவெனக் கட்டுங் கழல்வேந்தனைத் துயினீக்கியது எ - று.

(வ - று.)2அளந்த திறையா ரகலிடத்துமன்னர்
வளந்தரும் வேலோய் வணங்கக் - களந்தயங்கப்


1 . தொல். புறத். சூ. 29, இளம். மேற். 2. தொல். புறத். சூ.30. இளம். மேற்.