டிடிமுரசத் தானை யிகலிரிய வெங்கோன் கடிமுரசங் 2காலை செய. (இ - ள்.) பருத்தமணியும் சிவந்தபொன்னும்அந்தணர் முகந்து கொள்ள நிறத்த கண்ணினையுடையபசுக்களைத் தானம்பண்ணினான் களிப்போடு ,இடிபோல் முழங்கும் முரசினையுடைய மாற்றார்சேனை மாறுபாடுகெட எம்முடைய நாயகன், காவன்முரசம் நாட்காலையிலேமுழங்க எ-று . (14) 203. வேள்விநிலை அந்தமில் புகழா னமரரு மகிழச் செந்தீ வேட்ட சிறப்புரைத் தன்று. (இ - ள்.) முடிவில்லாத கீர்த்தியையுடையான்தேவர்களும் மனமகிழயாகம்பண்ணின தலைமையைச் சொல்லியதுஎ-று. (வ - று.) கேள்வி மறையோர் கிளைமகிழ்தலென்வியப்பாம் வேள்வி விறல்வேந்தன் றான்வேட்ப -நீள்விசும்பின் ஈர்ந்தா ரிமையோரு மெய்தி யழல்வாயால் ஆர்ந்தார் முறையா லவி. (இ - ள்.) கேள்வியினையுடைய வேதியர்சுற்றம்உவத்தல் என்ன அதிசயமாம் ? யாகத்தை வென்றிமன்னன் தான்விரும்ப உயர்ந்த சுவர்க்கத்தின் ஈரத்தாற்சிறந்த மாலையினையுடைய தேவர்களும் கிட்டி அழலாகியவாயாலே அருந்தினார், முறையாலே அவியை எ-று . எவனென்பது என்னெனக் குறைந்துநின்றது. (15) 204. வெள்ளிநிலை துயர்தீர்ப் புயறருமென உயர்வெள்ளி நிலையுரைத் தன்று. (இ - ள்.) இடரொழிய மழையைத் தருமெனச் சொல்லி உயர்ந்த வெள்ளியினது நிலைமையைச் சொல்லியது எ-று. (வ - று.) சூழ்கதிர் வான்விளங்கும்வெள்ளி சுடர்விரியத் தாழ்புயல் வெள்ளந் தருமரோ - சூழ்புரவித் தேர்விற்றார் தாங்கித் திகழ்ந்திலங்குவேலோய்நின் 1மார்விற்றார் கோலி மழை. (இ - ள்.) சந்திராதித்தர் வலமாக இயங்கும் ஆகாயத்தினை விளங்கப் பண்ணாநிற்கும் வெள்ளியானகோள் ஒளி பரக்க, அதனாற் கால்விழுந்த மேகம் மழைவெள்ளத்தைத் தரும்; தெரிந்த குதிரையாற் பூட்டப்பட்ட தேரின்மேல் வில்லையுடைய படையைத்தடுத்து மிக்கு விளங்கும் வேலினையுடையோய், நின்னுடைய அகலத்தின் மாலைபோல நீர்த்தாரை கோலி எ-று . (16)
1. "மார்விற்றிருவிற் பொலிமாலையினான்" (கம்ப. சரபங்க. 9.) (பி-ம்.) 2. 'காலைச்செய்' . |