10தண்டியலங்காரம்

10. ஹீயாமிருகம் :- புரணத்தில் உள்ளதும் , கற்பனையுமான கதையாக இருக்கும் . நாடகத் தலைவன் தேவனாகவும் , துணைத்தலைவன் மனிதனாகவும் இருப்பர் . மகளிரை விரும்பி அவர்களைக் களவினால்கொண்டு வரும் நிகழ்ச்சிகள் , போர் முதலியன இடம் பெற்றிருக்கும் . எனினும் கொலை நிகழ்ச்சி யற்றிருக்கும். உரையாடல்கள் தகுதியற்றனவா யிருக்கும்.

தமிழ் முத்தரையர் கோவை :- இத்தகைய நூலொன்று பெயரளவிலேயே அறியப்படுகின்றது . யாப்பருங்கல விருத்தியுரையால் இது சந்தத்தால் அமைந்த நூல் என்று மட்டும் அறிய முடிகின்றது . (95 - ஆம் நூற்பா உரை.)

பெருங்காப்பியம்

8. அவற்றுள்
பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்(று)
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமென்(று) இனையன புனைந்து
நன்மணம் புணர்த்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்று
இன்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரந் தூது செலவிகல் வென்றி
சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப.

எ-ன்: பெருங்காப்பியம் என்னும் பொருள்தொடர்நிலைச் செய்யுளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: 'பெருங்காப்பியநிலை...வியன்று' என்பது பெருங்காப்பியத்தின் இலக்கணத்தைச் சொல்லுமிடத்து வாழ்த்துதல் , தெய்வம் வணங்குதல் , உரைக்கும் பொருள் உணர்த்தலென்னும் மூன்றனுள் ஒன்று முன்வர நடப்பது . எ-று.

'1ஏற்புடைத்தாகி' என்றதனால் அவற்றுள் ஒன்றேயன்றி , இரண்டு வரினும் முன்று வரினும் இழுக்கன்றென்பது . வாழ்த்து' என்பது ஓர் அலங்காரம் ; அது 2முன்னர் உரைக்கப்படும்.

'நாற்பொருள்...நெறித்தாகி' என்பது அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நான்கினையும் பயக்கும் ஒழுகலாறு உடைத்தாய் எ-று.



1. 'வருபொருள்' என்றதனான் என்பதும் பாடம்.

2. அஎ-ஆம் நூற்பா.