எ - ன், இதுவும் அதனையே வகுத்துஉணர்த்துதல் நுதலிற்று.இ - ள் : அம்மடக்கு, நான்கடிச் செய்யுளுள்ளேமடக்குங்கால், ஓரடிக்கண்ணும், ஈரடிக்கண்ணும்,மூன்றடிக்கண்ணும், நான்கடிக்கண்ணும் நடக்குமென்றுசொல்லுவர் தெளிந்தோர் எ - று.
'நான்கடிச் செய்யுள்' என்பது ஆற்றலாற் போந்தபொருள். ஓரடிக்கண் வருவன : - முதலடிக்கண்ணும்,இரண்டாமடிக்கண்ணும், மூன்றாமடிக்கண்ணும்,நான்காமடிக்கண்ணும் வருவனவாம். அவை முன்னர்க்காட்டுதும்.
(2)
அதன்வகை
93. | ஆதி இடைகடை ஆதியோ(டு) இடைகடை |
| இடையொடு கடைமுழு தெனஎழு வகைத்தே. |
எ - ன், இதுவுமது.
இ - ள் : அம்மடக்கு, ஆதிமடக்கும்,இடைமடக்கும், கடைமடக்கும், ஆதியோடு இடைமடக்கும்,ஆதியோடு கடைமடக்கும், இடையோடு கடைமடக்கும்,முழுதும் மடக்கும் என எழுவகைப்படும். எ - று.
(3)
அதன் விரி
94. | ஓரடி யொழிந்தன தேருங் காலை |
| இணைமுதல் விகற்பம் ஏழும் நான்கும் |
| அடைவுறும் பெற்றியின் அறியத் தோன்றும். |
எ - ன், இதுவுமது.
இ - ள் : ஓரடி மடக்கு ஒழிந்தனஆராயுங்காலத்துத் தொடையின் இணைமுதலாகியவிகற்பத்தொடை ஏழும், அவை ஒழிந்த நான்குமாகியபதினொன்றும் உண்டாகி விளங்குவது போலவிளங்கித் தோன்றும் எ - று.
அவை : - முதலீரடிக்கண்ணும் மடக்குதலும்,முதலடிக்கண்ணும் மூன்றாமடிக்கண்ணும் மடக்குதலும்,முதலடிக்கண்ணும் நான்காமடிக்கண்ணும் மடக்குதலும்,கடையீரடிக்கண்ணும் மடக்குதலும்,இடையீரடிக்கண்ணும் மடக்குதலும்,இரண்டாமடிக்கண்ணும் நான்காமடிக்கண்ணும்மடக்குதலும் என்னும் இரண்டடி மடக்கு ஆறும்;ஈற்றடியொழித்து ஏனை மூன்றடிக்கண்ணும் மடக்குதலும்,முதலடி யொழித்து ஏனை மூன்றடிக்கண்ணும் மடக்குதலும்,முதலயலடி யொழித்து ஏனைய மூன்றடிக்கண்ணும்மடக்குதலும், ஈற்றயலடி யொழித்து ஏனை