மூன்றடிக் கண்ணும் மடக்குதலும் எனமூன்றடி மடக்கு நான்கும், நான்கடியும் மடக்கிய முற்றுமடக்குஒன்றும் ஆகிய பதினொன்றாம்.
யாப்பதிகாரத்துள்,தொடை விகற்பங்கட்கு நாற்சீரடியுள் ஓதியவதனைநான்கடிச் செய்யுளுள் ஓதினார், 'ஒப்பின்முடித்தல்' என்னும் தந்திரவுத்தியான்.இப்பதினொன்றும், ஓரடி மடக்கு நான்கும் ஆகியபதினைந்தும், மேற்கூறிய (93 - ஆம் நூற்பா) ஏழுகூறுபாட்டோடு கூட்ட நூற்றைந்து வகைப்படும்.
அவை, இடையிட்டுவருவனவும், இடையிடாது வருவனவும், இடையிட்டும்இடையிடாதும் வருவனவும் ஆகிய மூவகையோடும் கூட்ட முந்நூற்றொருபத்தைந்துவகைப்படும்.
(வி - ரை) 92 ஆம்நூற்பா முதல் இந்நூற்பாவரை கூறப்பட்ட தொடைகளைநான்கு வகையாகப் பிரிக்கலாம். (1) ஓரடி மடக்கு (2)ஈரடி மடக்கு (3) மூவடி மடக்கு (4) முற்று மடக்கு என்பன.
1. மேற்கூறியஓரடிமடக்கு நான்கு வகைப்படும். (1) முதலடியில்மட்டும் மடங்கி வருவது. (2) இரண்டாமடியில் மட்டும்மடங்கி வருவது. (3) மூன்றாமடியில் மட்டும் மடங்கிவருவது. (4) நான்காமடியில் மட்டும் மடங்கி வருவது.
2. ஈரடி மடக்கு ஆறுவகைப்படும். (1) முதல் ஈரடியில் மட்டும் மடங்கிவருவது. (2) முதலடியிலும் மூன்றாமடியிலும் மட்டும்மடங்கி வருவது. (3) முதலடியிலும் நான்காமடியிலும்மட்டும் மடங்கி வருவது. (4) இறுதி யிரண்டடியில்மட்டும் மடங்கி வருவது. (5) இடையிலுள்ள இரண்டடியில்மட்டும் மடங்கி வருவது. (6) இரண்டாமடியிலும்நான்காமடியிலும் மட்டும் மடங்கி வருவது.
3. மூவடி மடக்கு நான்குவகைப்படும். (1) ஈற்றடி யொழித்து ஏனைய மூன்றடியில்மடங்கி வருவது. (2) முதலடி யொழித்து ஏனைய மூன்றடியில்மடங்கி வருவது. (3) முதலடி, மூன்றாமடி, நான்காமடியில்மட்டும் மடங்கி வருவது. (4) முதலடி, இரண்டாமடி,நான்காமடியில் மட்டும் மடங்கி வருவது.
4. முற்றுமடக்கு ஒன்று.ஆகப் பதினைந்து வகைப்படும்.
இணை முதலாகியவிகற்பத் தொடை ஏழு : - இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை,மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்பன.
ஒப்பின் முடித்தல் -ஒன்றற்குச் சொல்லப்பட்ட இலக்கணம்,வேறொன்றற்கும் ஒத்து வருமாயின், அதற்கும் அதுவேஇலக்கணமாகக் கொண்டு, உடன் சேர்த்துக்கூறுதலாகும். இவ்வுத்தியின்படியாப்பிலக்கணத்தில் நாற்சீரடிக்குக் கூறப்பட்டஇணைமுதலாகிய ஏழு விகற்பங்களையும்,அணியிலக்கணமாகிய இதனுள் நான்கடியினும்கொள்ளப்பட்டதாம். மேற் கூறிய பதினைந்துமடக்குகளுள் இவ்விகற்பங்களைப் பெற்று வரும்மடக்குகள் ஏழாம். அவையாவன : -
1. ஈரடி மடக்குகளில்வருவன : -
(1) | முதல் ஈரடியில்மட்டும் மடங்கி வருவது - இணை. |
(2) | முதலடியிலும் மூன்றாமடியிலும் மட்டும்மடங்கி வருவது - பொழிப்பு. |
(3) | முதலடியிலும் நான்கா மடியிலும் மட்டும்மடங்கி வருவது - ஒரூஉ. |