சொல்லணியியல்179

தென்றல், இவளளவும் அனலைச்சொரிகின்ற காரணம் என்? சொல்லுவாயாக எ - று.

இதன் ஈற்றடியில்'மலையா மலையா' என்று ஒருசொல் மடங்கினமை காண்க.

இவைநான்கும் ஓரடி முதன்மடக்கு.

(வி - ரை) இப்பாடல் பிரிந்துமீண்ட தலைவனிடம் தோழி சொல்லியதாகும்.ஈற்றடியில் உள்ள தொடர் மலையா, மலையாநிலம்எனப் பிரித்துப் பொருள் கொள்ள நின்றது. மலையா -(அருவி) மோதா நிற்கப்பெற்ற. அருவி மலையாஎனக்கூட்டுக. மலயம் + அநிலம் = மலயாநிலம். மலயம் -மலை; பொதியிலை. அநிலம் - காற்று.

2. ஈரடி முதன்மடக்கு

(1) முதலடியும் இரண்டாமடியும் முதன்மடக்கு

  எ - டு :'நினையா நினையா நிறைபோ யகலா
வினையா வினையா மிலமால் - அனையாள்
குரவாருங் கூந்தல் குமுதவாய்க் கொம்பில்
புரவாள நீபிரிந்த போது'

இ -ள்: தலைவனே! குரவம்பூவினையுடைத்தாகிய கூந்தலினையும், அல்லி மலரை யொத்தவாயினையும், உடைத்தாய் இருப்பதொருவஞ்சிக்கொம்பு உண்டாயின், அக்கொம்புபோன்றாளாய இவளை நீ பிரிந்த பொழுதே நின்னையாங்கள் நினைத்து எங்கள் நிறையாயினது எங்களைவிட்டு நீங்கி வருந்தி ஒரு செய்தியும்அறியோமாயினேம் எ- று.

ஆதலால் எங்களைப்பிரியாது ஒழிவாயாக என்பது குறிப்பெச்சம்.'நின்னை' என்பது 'நினை' என விகாரமாயிற்று.

இதன் முதலடியில்'நினையா நினையா' என்றும், இரண்டாமடியில் 'வினையாவினையா' என்றும் மடக்குகள் வந்தமை காண்க.

(வி - ரை) இதுதலைவனைத் தோழி செலவழுங்குவித்ததாகும்.முதலடியில் நினை யாம் நினையா எனவும்,இரண்டாமடியில் இனையா வினையாம் எனவும்பிரித்துப் பொருள் கொள்ள நின்றன. இனையா -இனைந்து; வருந்தி.

(2) முதலடியும் மூன்றாமடியும்முதன்மடக்கு

  எ - டு :'அடையார் அடையார்அரணழித்தற் கின்னல்
இடையாடு நெஞ்சமே! யேழை - உடையேர்
மயிலா மயிலா மதர்நெடுங்கண் மாற்றம்

குயிலாமென் றெண்ணல் குழைந்து' 

இ -ள்: ஊசற்கயிறு ஒப்பஇடையாடும் உள்ளமே! நீ தலைவியினுடைய சாயலைமயிலாம் என்றும், அவளது மதர்த்த நெடிய கண்ணைவேலாம் என்றும், மொழியானது குயிலாம் என்றும்,இளகி நினையாது ஒழிவாயாக; அன்றி,நினைத்தியாயின் பகைவர் அடையும் அரிய அரணைஅழித்தற்கு வருத்தமாம் எ - று.