180தண்டியலங்காரம்

இதன் முதலடியில் 'அடையார் அடையார்' எனவும், மூன்றாமடியில் 'மயிலாமயிலா' எனவும் மடக்குகள் வந்தமை காண்க.

(வி -ரை) இப்பாடல் துணைவயிற்பிரிந்த தலைவன் பாசறைக்கண் இருப்புழி, தன்நெஞ்சிற்குக் கூறியதாகும். 'தூதும் துணைமையும்ஏதுவாகச் சென்றோன் அவ்வினை நின்றுநீட்டித்துழிப் புலந்து பாசறை புலம்பவும் பெறுமே'என்ற விதியால் இது தலைவனது பெருமைக்குஇழுக்காகாமை அறிக.

முதலடியில்அடையார், அடை ஆர் அரணம் எனவும், மூன்றாம் அடியில்மயிலாம், அயிலாம் எனவும் பிரித்துப் பொருள்கொள்ள நின்றன. அடையார் - பகைவர். அடை ஆர்அரணம் - அடைதற்கரியமதில். அயில் - வேல்.

(3) முதலடியும் ஈற்றடியும்முதன்மடக்கு

  எ - டு : 'மானவா மானவா நோக்கின்மதுகரஞ்சூழ்
கானவாங் கூந்தலெங் காரிகைக்குத் - தேனே
பொழியாரந் தார்மேலும் நின்புயத்து மேலும்
கழியா கழியா தரவு'

இ - ள் : மனுகுல வேந்தனே! மான்கள் ஆசைப்படும்நோக்கத்தையும், வண்டுகள் மதுவுண்ணும்படி சூழும்மணம் பொருந்திய கூந்தலையும் உடைய எமதுகாரிகையாட்கு, மதுப்பொழியும் நினது அழகியஆத்தித் தார்க்கண்ணும், நினது புயத்தின்கண்ணும்மிக்க ஆசை நீங்காது எ - று.

இதன் முதலடி முதலில்' மானவா மானவா' எனவும், ஈற்றடி முதலில் 'கழியாகழியா' எனவும் சொற்கள் மடங்கினமை காண்க.

(வி -ரை) இது தலைவியின்வேட்கையைத் தோழி தலைவற்குக் கூறியதாகும்.முதலடியில் மானவா, மான் அவா என்றும், நான்காம்அடியில் கழியா, கழி ஆதரவு என்றும் பிரித்துப்பொருள் கொள்ள நின்றன. மானவன் - மனு வேந்தனின்மரபில் தோன்றியவன். சூரியனின் மகன் மனு. அவன்மரபில் வந்தவர்கள் சோழர்கள். ஆதலின்சோழர்கள் மனுவழியில் வந்தவராவர். இம்முறையில்சூரிய வமிசத்தவருமாவர். கழி ஆதரவு கழியாஎனக்கூட்டுக. கழி - மிகுதிப்பொருள் தருவதோர்இடைச்சொல். 'கழியாது' என்பது 'கழியா' எனக் கடைக்குறைந்து நின்றது.

(4) மூன்றாமடியும்நான்காமடியும் முதன்மடக்கு

  எ - டு : 'மாதருயிர் தாங்க வள்ளல்வருநெறியில்
பேதுறவு செய்யும் பெரும்பாந்தள் - யாதும்
வரையா வரையா மெனுமா மதமா
விரையா விரையா வெழும்'

 இ -ள்: வள்ளலே! இவள்உயிரைத் தாங்குதல் காரணமாக நீ வரும் வழியில்,நடுக்கஞ் செய்யவற்றாகிய பெரும்பாந்தளானவை,யாதொன்றையும் வரையாதே கொல்லவற்றாகிய பெரியமலை போன்ற மதத்தையுடைய யானைகளை இரையாகநினைந்து இரைந்து கொண்டு வரும் எ - று.