என்பவற்றுள் முன்னையது காலத்தையும், ஏனையது கடலையும் குறித்தன. உலவா- குறையாத. உலவா - உலவி. உலவா வரும் ஓதம் எனப் பிரிக்க. மூன்றாம் அடியை அருகே தகை கேதகை சேர்தரும் அன்னம், மன்ன! எனப் பிரித்துப் பொருள் கொள்க. நான்காம் அடியைப் பெருகாதனவே, தனம் ஏர் அசை மாதர் மாதர் எனப் பிரித்துப் பொருள் காண்க. தனம் + ஏர் = தனவேர். மாதர் - மடவார். மாதர் - காதல்.
ஒழிந்த இடையோடு கடைமடக்காவன :- ஓரடி இடையோடு கடை மடக்கு நான்கும், ஈரடி இடையோடு கடை மடக்கு ஆறும், மூவடி இடையோடு கடை மடக்கு நான்குமாம்.
அடிதோறும் மூன்றிடத்து மடக்கு
எ - டு : | 'களைகளைய முளரியரு கடைகடைய |
| மகளிர்கதிர் மணியு மணியும் |
| வளைவளைய கரதலமு மடைமடைய |
| மதுமலரு மலைய மலைய |
| இளையிளைஞர் கிளைவிரவி யரியரியின் |
| மிசைகுவளை மலரு மலரும் |
| கிளைகிளைகொ ளிசையளிகண் மகிழ்மகிழ்செய் |
| கெழுதகைய மருத மருதம்' |
இ - ள் : களைகளை வாங்கத் தாமரை யருகே யடைந்த, கடைசியருடைய ஒளியினையுடைய மணிகளும், இடப்பட்ட வளை சூழ்ந்த கையும், அடைத்த மடையிலுள்ள தேனையுடைய பூவும், மிகவும் தம்முள் மாறுபடா நிற்க, இளங்குறுமாக்கள் சுற்றங் கூடி, அறுத்திடப்பட்ட நெல் அரியின் மீதேயுள்ள 1குவளைப்பூவும் மகிழும் பெற்றியது; இனத்துடனே கிளை என்னும் நரம்பினின்றும் எழும் இசை போலப் பாடாநின்ற அளிக்குலம், கள்ளை மகிழ மலரினுண்டு மகிழ் செய்யும் விளக்கமுடைய மருதமரத்தினையுடைய மருத நிலமானது எ- று.
இதில் 'களை களை', 'கடை கடை', மணியு மணியும்' என முதலடி மூன்றிடத்தும், 'வளை வளை', 'மடை மடை', 'மலைய மலைய' என இரண்டாமடி மூன்றிடத்தும், 'இளை யிளை', 'அரி யரி', 'மலரு மலரும்' என மூன்றாமடி மூன்றிடத்தும், 'கிளை கிளை', 'மகிழ் மகிழ்', 'மருத மருதம்' என நான்காமடி மூன்றிடத்தும் மடக்குகள் வந்தமை யுணர்க.
ஒழிந்த முழுதும்மடக்கு வந்தவழிக் கண்டு கொள்க.
(வி - ரை)இது மருதநில வருணனையாகும். அடை கடைய மகளிர் - அடைந்த கடைசியர், கதிர் மணியும் - ஒளியினையுடைய மணிகள். அணி வளை - அணியப்பட்ட வளையல்கள். வளைய கரதலம் - (வளையல்கள்) சூழப்பட்ட கையும். அடை மடைய - அடைத்த மடை; நீர் அடைக்கப்பட்ட மடு. அலைய மலைய - மிகவும் மாறுபட. இளை - இளைய. இளைஞர் - மாக்கள்; அரி - அறுக்கப்பட்ட. அரியின்மிசை - நெல்லரியின் மீது. குவளை மலரும் - குவளைப்பூ. அலரும் - மகிழும். கிளை - இனம். கிளைகொள் இசை - கிளை
1. 'குவளைப்பூவும் மலரும்' என்பதும் பாடம்.