சொல்லணியியல்189

என்னும் நரம்பிலிருந்து எழும் இசை. மகிழ் - மகிழம்பூ. மகிழ்செய் - (அதன் கண் உள்ள தேனை யுண்டதால்) மகிழ்ச்சி செய்யும். மருதம் - மருதமரம். மருதம் - மருத நிலம்.

ஒழிந்த முழுதும் மடக்காவன : - ஓரடி முழுதும் மடக்கு நான்கும், ஈரடி முழுதும் மடக்கு ஆறும், மூவடி முழுதும் மடக்கு நான்குமாம்.

இனி, இடையிட்டு வந்த மடக்கும், இடையிடாது வந்த மடக்கும், இடையிட்டும் இடையிடாதும் வந்த மடக்கும் இவ்வாறே கண்டு கொள்க.

இடையிட்டு வரும் மடக்காவது :- ஒரு சொல்லானது இடையில் பல்வேறு வகைப்பட்ட சொற்கள் வர, வெவ்வேறிடத்தில் மடங்கி வருவது. இடையிடாது வரும் மடக்காவது :- ஒரு சொல்லானது, இடையில் வேறு சொற்கள் கலவாமல், அடுத்து 'வஞ்சியான் வஞ்சியான்' என்பது போல மடங்கி வருவது. அவற்றுள் சில வருமாறு : -

(1) இடையிட்டு வந்த முதன் முற்றுமடக்கு

எ - டு :

'தோடு கொண்டளி முரன்றெழக் குடைபவர் குழல்சோர்ந்த 

தோடு கொண்டதே மலர்சுமந் தகில்கமழ்ந் தவர்தம்

தோடு தைந்தசெஞ் சாந்தணி திரண்முலை யிடைதோய்ந்

தோடு தண்புனல் நித்திலந் துறைதொறுஞ் சொரியும்'

 இ - ள் : கூட்டங் கொண்டு வண்டுகள் ஒலித்தெழப் புனலாடுவார் குழலிற் சோர்ந்த இதழ் கொண்ட தேனோடு கூடிய மலரைச் சுமந்து, அகில் நாறப்பட்ட அம்மாதருடைய தோளைச் செறிந்த செஞ்சந்தனம் அணியப்பட்ட திரண்ட முலையிடையே பட்டு ஓடாநின்ற குளிர்ந்த புனலானது முத்துக்களைத் துறைகள்தோறும் குவியா நிற்கும் எ- று.

இதில் 'தோடு' என்ற சொல் நான்கடிகளிலும் முதலில் மடக்காக வந்தமை காண்க.

(வி - ரை) தோடு - கூட்டம்; இதழ். மூன்றாம் அடியைத் தோள் துதைந்த என்றும், நான்காம் அடியை ஓடு தண் புனல் என்றும் பிரித்துப் பொருள் கொள்க. இப்பாடற்கண் அடிதோறும் முதற்சொல் மடங்கி வந்தவாறும், அவை சீர்கள் இடையிட்டு வந்தவாறும் காண்க.

(2) இடையிட்டு வந்த இடை முற்றுமடக்கு

எ - டு :

'பரவி நாடொறும் படியவாம் பல்புகழ்ப் பரப்பின்

இரவி சீறிய படியவாம் பரியெரி கவர 

விரவி மான்பயில் படியவாம் வேய்தலை பிணங்கும் 

அருவி வாரணம் படியவாம் புலர்பணை மருதம்'

இ - ள் : நாடோறும் வழுத்தி உயர்ந்தோர் விரும்பும் பல புகழை யுடைத்தாகிய நாட்டினையுடைய சோழன் சீறிய ஊர்கள் வாவிச் செல்லும் நெருப்பினாற் கொள்ளப்பட, அவை மானினம் திரண்டு சஞ்சரிக்கும் தன்மையவாம்; அந்தச் சோழனின் யானை புகுந்து கலக்க நீர் புலரும் தடங்களையுடைய வயல் மருதம், மூங்கில் தம்முள் செறிவனவாம் எ- று.