பொதுவணியியல்29

வி-ரை: 'அகலிரு ............ பரிதி' என்பதன் பொருள் : - அகன்ற பெரிய விண்ணிடத்தே தோன்றிப் பரந்த இருளை விழுங்கிப் பகற்பொழுதை உலகத்தில் தோற்றுவித்து எழுதலைச் செய்யும் பல ஒளிக்கதிர்களுடைய கதிரவன் என்பதாகும் .

இதன்கண் முக்கியப் பொருள் மக்கள் . அவர்களுக்குரிய பருகுதலையும் , தோற்றுவித்தலையும் ஒப்புடைப் பொருளான கதிரவனுக்கு ஏற்றிச் சொல்லப் பட்டிருத்தலின் , இது சமாதி யாயிற்று .

'விழித்த ........... வண்டினம்' என்பதன் பொருள் :- மலர்ந்த குவளை மலர் உப்பங் கழியிலுள்ள மலர்களில் சொரிந்த கள்ளினை உண்டு மகிழ்ந்த வண்டுக் கூட்டங்கள் என்பதாம் .

இதன்கண் விழித்தலும் , சொரிதலும் , களித்தலும் ஆகிய மக்களின் வினைகளைக் குவளைக்கும் வண்டிற்கும் ஏற்றிச் சொல்லப்பட்டிருத்தலின் , இது சமாதியாயிற்று .

'கன்னி யெயில்' என்பது அழியாத மதில் என்றும் , 'குமரி ஞாழல்' என்பது இளமையான ஞாழல் மரம் என்றும் பொருள்படும் . இவற்றில் கன்னித் தன்மை , குமரித் தன்மை ஆகிய பெண்களின் தன்மைகளை முறையே மதிலுக்கும் , மரத்திற்கும் ஏற்றிச் சொல்லப்பட்டிருத்தலின் இவை சமாதியாயின .

'கடுங்கை .......... கோ' என்பதன் பொருள் :- வலிய கையினையுடையவரும் , வயலில் உழவுத் தொழிலைச் செய்கின்றவருமான உழவர்கள் தனது அடிப் பகுதியை வெட்ட , அதனால் அறுபட்டு மடங்கிய குவளைக் கொடிவரப்பிற் சேர்ந்து பின்பு நீண்ட நெற்றாள் அரிகளின் மீது கிடக்க , அக்கொடியிலுள்ள மலர் குவிந்து கிடக்கும்படியான நீண்ட நீர்வளமுடைய அவந்தி நாட்டரசராகிய ஆண் சிங்கமே இங்கிருக்கும் தலைவனாவான் என்பதாம் .

இது சுயம்வர மண்டபத்தில் தோழி , தலைவிக்கு அவந்திநாட்டரசரை அறிமுகம் செய்து வைப்பதாகும் .

கால் என்று உறுப்பினை வழங்குவதும் , கண்படுத்தல் என்றவினைக்குரிய - தாக்குவதும் மக்களுக்குரிய தன்மையாம் . இவற்றைக் குவளைக் கொடிக்கும் அம்மலருக்கும் ஏற்றிச் சொல்லியிருத்தலின் இது சமாதியாயிற்று .

இதுகாறும் கூறியவற்றான் வைதருப்ப நெறிக்கும் கௌட நெறிக்கும் உள்ள வேற்றுமை நன்கு புலனாகும் . அது வருமாறு :-

வைதருப்ப நெறி

கௌட நெறி

1. செறிவு முதலிய பத்துக் குணங்களையும் ஏற்கும் . அப்பத்தனுள் சிலவற்றை ஏற்கும் .
2. பெரும்பாலும் மூவினங்களால் இயன்ற பாடலையே விரும்புவர் . ஓரினமான எழுத்துக்களால் இயன்ற பாடலையே விரும்புவர் .