பொருளணியியல்37

'பவளம் போலச் செவ்வாய்' என்பதனை முற்றுவமை என்றுங் கூறுபவாகலின் , ஈண்டு உவமை யலங்கார மென்பது அத்தொடர்ச்சொல் முழுவதும் எனக்கொள்க.

மற்றும் பண்பியும் , பண்பும் , தொழிலும் , பயனும் எனக் கூறப்படுவன நான்கு. அவற்றுள் பண்பியென்பன : காட்சிப்பொருளும் கருத்துப் பொருளுமாகிய இயங்குதிணையும் நிலைத்திணையுமாம். பண்பு என்பன : அவற்றின் குணமாய்த் தோன்றித் தமக்கு வேறு குணமின்றி நிகழ்வன . தொழில் என்பன : அவற்றின் புடை பெயர்ச்சியாய்க் காலம் புணர்ந்து நிற்பன . பயன் என்பன : அவை காரணமாகப் புலப்படுங் காரியம்.

பண்பியாகிய ஒருபொருட்கு ஒரு பொருள் உவமையாங்கால் , இரண்டற்கும் பொதுவாகியதொரு குணம் ஏதுவாகலானும் , தொழில் ஏதுவாகலானும் , பயன் ஏதுவாகலானும் ஒப்பித்து உரைக்கப்படும்.

'என்று இவற்றின் ' என்பதனான் , பண்பு தொழில் பயன் என்பன ஒரோவொன்றே யன்றிப் பலவும் காரணமாக வரும் . அவை :-

'கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கான நாடன் '

-குறுந் -54.

என்பது தொழிலும் பண்பும்.

'காந்தள் , அணிமலர் நறுந்தா தூதும் தும்பி
கையாடு வட்டிற் றோன்றும் '

- அகம் -108

என்பது பண்பும் தொழிலும் . அல்லதூஉம் அவ்விலேசானே பண்பு , தொழில் , பயன் என்பனவே யன்றிச் சொற்பொதுமை காரணமாகவும் பிற காரணமாகவும் வரும் உவமை அலங்காரமென்பது . அவை முன்னர் உரைக்கப்படும்.

'ஒப்புமை தோன்ற ' என்றதனால் , அவ்வுவமை கேட்போர் உளங்கொண்டு விளங்கத் தோன்றுவதேயாகல் வேண்டும் ; யாதானும் ஒரு முகத்தாற் கூறற்க என்பது.

வி-ரை: பண்புவமை - 'பவளத்தன்ன மேனி ' என்பது வண்ணப் பண்பு. 'வேய்புரை பணைத்தோள் ' என்பது மூங்கில் போன்ற பருத்த தோள் எனப் பொருள் படுதலின் வடிவுப் பண்பாம். 'தெம்முனை ...நாடே ' என்பது ' தோழீ! தலைவன் நம்மைவிட்டுப் பிரிந்துசென்ற நாடு பகைவர் முனையிடத்தினும் சேய்மை யுடையதோ ? ' எனப் பொருள்படுதலின் அளவுப் பண்பாம்.

தொழிலுவமை:- 'அரிமா வன்ன ... வளவன் ' என்பது சிங்கத்தை யொத்த பகைவர்க்கு அஞ்சத்தக்க வலிமையுடையவன் கரிகாற் பெருவளத்தான் எனப் பொருள்படும் . அச்சத்தைத் தருதலாகிய தொழில்பற்றிச் சிங்கம் வளவனுக்கு உவமையாயிற்று. 'களிற்றிரை...போல ' என்பது யானையாகிய உணவைத் தின்னத் தேடிக்கொண்டு வரும் புலி பக்கப்பார்வையுடன் பதுங்கி வருதல் போலத் தலைவியிடத்து இன்பந் துய்த்தற்காக வரும்


1. 'பிரிமொழிச் சிலேடை யுவமை' யைக் காண்க.