பொருளணியியல்41

(இ-ள்) தாமரை போன்ற ஒளியையுடைய முகத்தினையும், குளிர்ந்த முத்துப் போன்ற நகையினையும் , அழகு மருவிய வேய் போன்ற தோளினையும் உடைய மாதரீர் ! உம்முடைய பக்கத்திலே யுலாவுகின்ற தென்றலின் தன்மை , உம்முடைய தேன் பொருந்திய பூவினையுடைத்தாகிய குழலின்கண் உண்டாகிய நறுநாற்றப் பாரத்தைத் தாங்கிக்கொண்டு வருகின்ற வருத்தந் தானோ மெல்லிய வுருவுடைத்தானது ? சொல்லுவீராக எ-று.

பொறை - பாரம் . பரிசு - தன்மை .

வி-ரை: முகத்திற்குத் தாமரையையும் , முறுவலுக்கு முத்தையும் , தோளிற்கு மூங்கிலையும் உவமையாகக் கூறப்பட்டிருப்பினும் , இன்ன தன்மையால் உவமை கூறப்பட்டது என்னும் பொதுத்தன்மையை மறைத்துக் கூறியுள்ளமையால் இது தொகையுவமையாயிற்று .

உவமை , பொருள் , உவம உருபு , பொதுத்தன்மை ஆகிய நான்கனுள் ஒன்றேனும் இரண்டேனும் மூன்றேனும் தொக்கு வருவது தொகையுவமை என்பர் தண்டியலங்காரசார ஆசிரியர் . தொகையுவமையைத் தொல்காப்பியர் 'சுட்டிக்கூறா உவமை' என்பர் .

(3) இதரவிதர வுவமை என்பது பொருள் ஒருகால் உவமையாயும் , உவமை ஒருகாற் பொருளாயும் ஒருதொடர்ச்சிக்கண்ணே வருவது .

எ-டு : 'களிக்குங் கயல்போலு நுங்கணுங் கண்போல்
களிக்குங் கயலுங் கனிவாய்த் - தளிர்க்கொடியீர் !
தாமரைபோல் மலரு நும்முகம் நும்முகம்போல்
தாமரையுஞ் செவ்வி தரும் '

(இ-ள்) கொவ்வைக் கனிபோன்ற வாயினையுடைத்தாய்த் தளிரோடு கூடிய கொடிபோன்ற மடவீர் ! செருக்கினை யுடைத்தாகிய கயல்போன்ற தன்மையை யுடைத்தாயிருந்தன நும்முடைய நாட்டங்களானவை ; இத்தன்மைத்தாகிய உம்முடைய நாட்டங்களிற்கு உவமையாகின்றன கயற்குலமானவை . இஃதன்றியே , உம்முடைய முகமண்டலமானது தாமரைபோல் மலரா நின்றது ; அத்தன்மைத்தாகிய தாமரை உம்முடைய முகமண்டலம் போலச் செவ்வியினை யுடைத்தாகின்றது என்றவாறு .

'தளிபெற்று வைகிய தண்சுனை நீலம்
அளிபெற்றார் கண்போல் அலரும். அளிபெற்ற
நல்லார் திருமுகத் தாற்ற நளிர்பெற்ற
கல்லாரம் போன்மலருங் கண் '

என்பதூஉம் அது .

(இ-ள்) மழையை ஏற்றுக் கோடலின் தட்பத்தை யுடைத்தாகிய சுனையின்கண் இருக்கின்ற நீலப்பூவானது தலைவரால் நலம் பாராட்டப்பெற்ற மடவார் கண்ணேபோல மலரா நின்றது ; அத்தன்மைத்தாக அளிபெற்ற நல்லாராகிய மடவாருடைய அழகிய முகமண்டலத்து மிகக்குளிர்ச்சியை யுடைத்தாகிய கண்களும் நீலம்போல மலரா நின்றன எவ்வாறு .

தளி - மழைத்துளி . ஆற்ற - மிக .