62தண்டியலங்காரம்

எ-ன், நிறுத்த முறையானே உருவகம் என்னும் அலங்காரத்தின் பொது விலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று

இ-ள்: உவமையாம் பொருளையும்,உவமிக்கப்படும் பொருளையும் வேறுபாடு ஒழிவித்து ஒன்றென்பதோர் உள்ளுணர்வு தோன்ற ஒற்றுமை கொளுத்தின் அஃது உருவகம் என்னும் அலங்காரமாம் எ-று.

வி-ரை:உவமைக்கும் பொருளுக்கும் வேற்றுமை தோன்றக் கூறுதல் உவமை அணியாம். அவ்விரண்டிற்கும் வேற்றுமையின்றி ஒன்றென் றென்னுமாறு கூறின் அது உருவக அணியாம். மாட்டுதல்--பொருளில் உவமையை ஏற்றிச் சொல்லுதல்.

அதன்வகை

36. தொகையே விரியே தொகைவிரி யெனாஅ
இயைபே இயைபிலி வியநிலை யெனா அச்
சிறப்பே விருபகஞ் சமாதான மெனா அ
உருவகம் ஏகம் அநேகாங்க மெனா அ
முற்றே அவயவம் அவயவி யெனா அச்
சொறறஐம் மூன்றும் மற்றதன் விரியே.

எ-ன், அவ்வுருவகம் என்னும் அலங்காரத்தை விரித்து உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: தொகையுருவகமும், விரியுருவகமும், தொகைவிரியுருவகமும் இயைபுருவகமும், இயைபிலியுருவகமும்,வியநிலையுருவகமும்,சிறப்புருவகமும்,
விருபகவுருவகமும்,சமாதானவுருவகமும்,உருவகவுருவகமும்,ஏகாங்கவுருவகமும், அநேகாங்கவுருவகமும், முற்றுருவகமும், அவயவவுருவகமும்,அவயவிவுருவகமும் எனச் சொல்லபட்ட பதினைந்தும் மேற்கூறிய உருவகத்து விரியாம் எ-று.

இவற்றிற் கெல்லாம் உருவகம் என்னுஞ் சொல்லும், ஏகம் என்பதனோடு அங்கம் என்னுஞ் சொல்லும், கூட்டி யுரைக்கப்பட்டன. இவையெல்லாம் சொல்லின் முடியும் இலக்கணத்தன.

வி-ரை:தொகையுருவகம் முதலியன த த் த ம் பெயர் கூறும் அளவிலேயே, அவற்றின் இலக்கணமும் புலப்படுதலின் சொல்லின் முடியும் இலக்கணத்தனவாம். ஆதலின் நூலாசிரியர் விளக்கிற்றிலர். எனினும் உரையாசிரியர் அவற்றை முறையே விளக்குவர்.

அவற்றுள், (க) தொகையுவருவகம் என்பது ஆகிய என்னும் மாட்டேற்றுச் சொல் தொகுத்துக் கூறுவது.

எ-டு: அங்கை மலரும் அடித்தளிருங் கண்வண்டும்
கொங்கை முகிழுங் குழற்காரும் - தங்கியதோர்
மாதர்க் கொடியுளதா னண்பா ! அதற்கெழுந்த
காதற் குளதோ கரை'

இ-ள்: அழகிய கையாகிய மலரினையும், அடியாகியதளிரினையும், கண்ணாகிய வண்டினையும், கொங்கையாகிய அரும்பினையும், குழலாகிய மேகத்தினையும் உடைத்தாய்ப் பிறர்க்குக் காதல் செய்யவற்றாயிருப்பதொரு


1. 'கண்ணம்பும்' என்பது,

2.' கொடி உளதால் மண்பால்' என்பதும் பாடங்களாகும்.