10 என்று குறிப்பிட்டுள்ளார், நச்சினார்க்கினியர் இதனொடு மலையே. அளக்க லாகாப் பெருமையும் அருமையும் அருங்கலம் உடைமையும் ஏறற்கு அருமையும் பொருந்தக் கூறுப பொச்சாப் பின்றி, நிலத்தின் இயல்பே நினைக்கும் காலைப் பொறையுடை மையொடு செய்பாங்கு அமைந்தபின் விளைதல் வண்மையும் போய்ச்சார்ந் தோரே. இடுதலும் எடுத்தலும் இன்னணம் ஆக இயையக் கூறுப இயல்புஉணர்ந் தோரே. பூவினது இயல்பே பொருந்தக் கூறின் மங்கல மாதலும் நாற்றம் உடைமையும் காலத்தின் மலர்தலும் வண்டிற்கு ஞெகிழ்தலும் கண்டோர் உவத்தலும் விழையப் படுதலும் உவமத்து இயல்பின் உணரக் காட்டுப. துலாக்கோல் இயல்பே தூக்குங் காலை மிகினும் குறையினும் நில்லா தாகலும் ஐயம் தீர்த்தலும் நடுவு நிலைமையொடு எய்தக் கூறுப இயல்புஉணர்ந் தோரே |
என நான்கும் கண்டுகொள்க என்பர். துலாக்கோலினை நன்னூலார் விடுத்துத் தராசுக் கோலினைக் கொண்டுள்ளார். இவ்வாசிரியரும் அவர் உரைத்ததே உரைத்தார். தராசுக்கோல் நிறுத்தல் கருவியாகத்தான் இருந்துவைத்தும், படிக்கல் முதலிய பிற கருவிகள் இன்றி நிறுத்தல் செய்யாது ஆதலின், துலாக்கோலே தக்க உவமமாகும் என்பார் சண்முகனார்; “துலாக்கோல் என்பது நூறுபலத்தளவு தன் நாவின்கண் உள்ள வரையான் உணர்த்தும் சிறப்புடைய நிறுத்தல் கருவியை; துலாம் என்பது நூறுபலம். அஃது ஆகு பெயரான் அதனை உணர்த்தும் வரையினை உணர்த்திற்று” என்றும் விளக்கங் கூறுவர். |