9 வழியும், தான் கொண்டுள்ள அறிவுச் செல்வத்தைப் பிறருக்கு வழங்கும் வள்ளன்மையும் உடையனாதல் வேண்டும் என்றவாறு. ஐயந் தீரப் பொருளை உணர்த்தலும் மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே நன்-29 எனவும். தான் சமனாய் நின்று பின் தன்கண் வைக்கப்படும் பொருளின் நிறையை ஐயமின்றி உணர்த்துவது தராசுக்கோலின் இயற்கையாம். அதுபோல, ஆசிரியன், எஞ்ஞான்றும் வாரம் பட்டாதல் தீரக்காய்ந்தாதல் தன் மாணாக்கருள் ஒருவர் பக்கம் சாராது, தன்மேதக்க அறிவு கொண்டு அவர் தகுதியை உள்ளவாறு பிறருக்குத் தெரிவிக்கும் பண்பு உடையனாதல் வேண்டும் என்பது. மங்கல மாகி இன்றியமை யாது யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் பொழிழுன் முகமலர்வு உடையது பூவே நன்-30 எனவும் ஓதிய இவற்றானும். பூவானது மங்கலப்பொருளாகி நற்கருமங்களுக்கு இன்றியமையாததாய் எல்லோரும் தன்னைத் தலையில் சூடிக்கொள்ளும் தகுதியதாய், உரிய நேரத்தில் நெகிழ்ந்து மலரும் இயல்பிற்று, அதுபோல, ஆசிரியன், ஊருக்கே மங்கலமானவனாய், நற்செயல் நிகழும் இடங்களிலெல்லாம் இடம்பெறுபவனாய், எல்லோராலும் போற்றப்படுபவனாய், மாணாக்கனுக்கு முக மலர்ச்சியோடு மனம் நெகிழ்ந்து பாடம் சொல்லுபவனாய் அமைதல் வேண்டும் என்பது. இனி ஆசிரியரைப்பற்றி உரையாசிரியர் மலைநிலம் பூவே துலாக்கோல் என்றின்னர் உலைவில் உணர்வுடை யோர் |