8 தன்னகத்தே ஆழத்தே பொதிந்துள்ள பொருள்களைப் பிறர் அறிதற்கு இயலாத பெருமையும், தனக்கே இயல்பாக உள்ள அணுச்செறிந்திருத்தலாகிய அழுத்தமும், அகழ்வாரையும் தாங்கும் பொறுமையும், தக்க பருவத்தில் தன்னை யணுகிச் செய்யப்படும் முயற்சிக்கு ஏற்பப் பயன் கொடுத்தலும் நிலத்தின் மாண்புகளாம். நிலம்போல, மாணாக்கன் தன்அறிவு கொண்டு காண இயலாத பல செய்திகளை உள்ளடக்கியுள்ள அறிவின் பெருமையும், வறுமையிலும் செம்மை குறையாமைக்கும் காரணமாகிய மனத்திண்மையும், மாணாக்கன் அறிவின் திரிபால் தவறு இழைத்தானாயினும் அவனைப் பொறுத்தற்காம் பொறுமையும், மாணாக்கன் எடுத்துக் கொள்ளும் முயற்சிக்கு ஏற்ப அவனுக்கு அறிவு ஆக்கம் தருதலும் ஆசிரியனுக்கு அமைதல் வேண்டும் என்பது. அளக்க லாகா அளவும் பொருளும் துளக்க லாகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே எனவும் நன்-28 பிறரால் எளிதில் அளந்து அறிதல் இயலாத பரப்பும் உள்ளடக்கிய செல்வமும், யாரும் அசைக்க முடியாத உறுதியும் சேட்புலத்தோருக்கும் காட்சி வழங்கும் தோற்றமும், ஏனைய முல்லை மருதம் நெய்தல் ஆகிய நிலங்களில் வற்கடம் உற்ற காலத்திலும் தான் பிறருக்குத் தன் வளங்களை வழங்கும் வள்ளன்மையும் மலைக்கு உரிய மாண்புகளாம். அம்மலை போல, ஆசிரியன், பொதுமக்கள் அளந்து வரையறை செய்தல் இயலாத பண்புச் சிறப்பும், கல்விப் பொருளும், பிறரால் வாதிட்டு வெல்லுதற்கு இயலாத அசைக்கமுடியாத அறிவு நிலையும், தன்பெயர் சேட்புலத்தோரானும் அறியப்படுதற்கு ஏதுவாகிய புகழின் தோற்றமும் உடையவனாய், உலகமே மிடியான் வறுமையுற்ற |